Ticker

6/recent/ticker-posts

Ad Code

Syria: முடிவுக்கு வந்த 50 ஆண்டுகால குடும்ப ஆட்சி... அதிபர் அசாத் தப்பினாரா, கொல்லப்பட்டாரா?

சிரியா நாட்டில் இஸ்லாமியப் புரட்சியாளர்கள் நாட்டின் தலைநகரான டமாகஸ்ஸை கைப்பற்றியதுடன் அதிபர் பஷர் அல்-அசாத்தை வெளியேற்றியதாக அறிவித்துள்ளனர்.

சிரியாவில் கிளர்ச்சிப் படைகள், தனது விரைவான தாக்குதல் மூலம் தலைநகர் டாமஸ்கஸை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதால், அங்கு 50 ஆண்டுகளாக நடந்து வந்த ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அசாத் குடும்பத்தின் கடுமையான ஆட்சி, 13 ஆண்டுகால உள்நாட்டு போருக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. மத்திய கிழக்கு அரசியல் பிரச்னைகளுக்கு மத்தியில் இது மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

சிரியா

இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் வெற்றி மத்திய கிழக்கில் ரஷ்யாவின் ஆதிக்கத்தையும் சிரியா மீதான ஈரானின் ஆதிக்கத்தையும் மட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததாக சிரிய இராணுவம் அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததாக ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிபர் பஷார் ஆசாத் மற்றும் சிரிய அரபு குடியரசு பிராந்தியத்தில் மோதலில் ஈடுபட்டுவந்த குழுக்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, தனது அதிபர் பதவியை துறந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும் முடிவினை எடுத்தார், அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை மற்றுவதற்கான உத்தரவினை வழங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார் என ரஷிய வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று சிரியா ராணுவம் கூறியிருக்கிறது.

அசாத் ஞாயிற்றுக்கிழமை நாட்டிலிருந்து தப்பி விமானத்தில் பறந்து சென்றதாக கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் இடைக்கால ஆளும் குழு ஒன்றை அமைத்து முழுமையாக அதிகாரப்பரிமாற்றம் மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

சிரியாவில் கிளர்ச்சி படையினர் ஆட்சியை பிடிப்பதற்கு பல சர்வதேச அரசியல் காரணிகள் கை கூடியதாக சொல்லப்படுகிறது. அசாத் ஆட்சியின் முக்கிய கூட்டாளியாக இருந்த ரஷ்யா, உக்ரைன் போரில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது. மற்றொரு கூட்டாளியான லெபனானின் ஹெசபொல்லா இஸ்ரேலுடனான மோதலில் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருந்தது.

2011 முதல் நடைபெற்று வரும் கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களுக்கு அல் கொய்தா பல உள்ளிட்ட சில தீவிரவாத அமைப்புகள் ஆதரவளித்துள்ளன. தற்போததைய சூழலைப் பயன்படுத்தி தீவிரவாத அமைப்புகள் ஊடுருவக் கூடாது என்பதனால் அனைவரும் எச்சரிக்கையாக செய்ல்பட வேண்டும் என துருக்கி அரசு தெரிவித்திருக்கிறது.

சிரியாவின் பிரதமர் முகமது காசி அல்-ஜலாலி சுதந்திரமான தேர்தல் நடக்க முன்மொழிந்துள்ளார்.

இஸ்லாமிய குழுக்கள், அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி என்ற எந்த தரப்பு ஆதிக்கமும் இல்லாத ஆட்சியை அமைப்பது சிரியாவுக்கு இருக்கும் முக்கிய சவால்.

இதனிடையே நாட்டில் இருந்து தப்பிச் சென்ற ஆசாத்தின் இருப்பிடம் குறித்த தகவல்கள் எதுவும் கூறப்படவில்லை. அவர் செல்லும் வழியில் விமான விபத்தில் இறந்திருக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

கிளர்ச்சி குழுவினர் தலைநகருக்குள் நுழைந்த நேரத்தை ஒட்டி டமாக்கஸ்ஸிலிருந்து வெளியேறிய Ilyushin Il-76T விமானம் குறித்த விமான கண்காணிப்பு தளம் Flightradar24.com, ஹோம்ஸ் நகரின் அருகில் விமானம் ரேடாரில் இருந்து மறைவதைக் காட்டுகிறது.

இதனால் அவரது விமானம் விபத்துக்கு ஆளாகியிருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments