ரவீந்தர், அர்னவ், ரஞ்சித், ஜாக்குலின், ஆர்.ஜே.ஆனந்தி, சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டுப் போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக்பாஸ் சீசன் 8. அடுத்த சில வாரங்களில் ராயன், மஞ்சரி, ராணவ் உள்ளிட்ட மேலும் ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.
அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ரவீந்தர், அர்னவ், சுனிதா, வர்ஷினி வெங்கட் முதலான சிலர் வெளியேறி விட்டனர்.
இந்நிலையில் இந்தவார எவிக்ஷனுக்கான ஷூட் நேற்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.
முற்பகலில் வாரம் முழுக்க அந்த வீட்டுக்குள் நடந்த விஷயங்கள், சண்டை சச்சரவுகள் குறித்து போட்டியாளர்களிடம் பேசினார் விஜய் சேதுபதி.
மாலையில் எவிக்ஷனுக்கான நேரம் வந்தது.
வழக்கம் போல் இந்த வாரமும் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் சௌந்தர்யா, ஜாக்குலின், ரஞ்சித், சத்யா உள்ளிட்ட பலர் இருந்த நிலையில் மக்களின் ஒட்டுகள் அடிப்படையில் சாச்சனா, ஆர்.ஜே, ஆனந்தி இருவரும் வெளியேற்றப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சௌந்தர்யா, ஜாக்குலின் உள்ளிட்ட சிலருக்கு சாச்சனாவின் வெளியேற்றம் மகிழ்ச்சியைத் தந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த சீசன் தொடங்கிய பிறகு முதல் முதலாக நிகழும் டபுள் எவிக்ஷன் இது.
50 நாட்கள் கடந்து விட்ட பிறகும் பிக்பாஸ் வீட்டுக்குள் அதிகப்படியான போட்டியாளர்கள் இருப்பதால் கடந்த வாரமே டபுள் அல்லது மிட் வீக் எவிக்ஷன் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அப்போது நடக்கவில்லை.
இப்போது நடந்துள்ளது. சாச்சனாவைப் பொறுத்தவரை நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் வெளியேறியவர். ஆனால் அடுத்த வாரமே மீண்டும் என்ட்ரி ஆனார்.
இன்னொரு ரீ என்ட்ரிக்கு நிச்சயம் வாய்ப்பில்லை என்கிறார்கள்.
ஆர்.ஜே. ஆனந்தி, சாச்சனா வெளியேறிய எபிசோடு இன்று ஒளிபரப்பாகவிருக்கிறது.
from Vikatan Latest news
0 Comments