இந்தியாவில் ஊதிய ஏற்றத்தாழ்வு நிகழ்வதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு வகையில் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 உலகளாவிய ஊதிய அறிக்கை, இந்தியாவில் வருமானம் ஈட்டுவோரில் முதன்மையாக இருக்கும் 10 சதவீதத்தினர், கீழ்மட்டத்தில் கடைசியாக இருக்கும் 10 சதவீதத்தினரை விட 6.8 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர் என்று கூறுகிறது.
இது பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம் மற்றும் மியான்மர் உட்பட நமது அண்டை நாடுகளை விட மிகவும் மோசமானது. குறைந்த - நடுத்தர வருமானம் ஈட்டும் மக்களில், மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இருப்பதை அந்த அறிக்கை விளக்கியிருக்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் சுயதொழில், வகைப்படுத்தப்படாத முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் குறைந்த ஊதியம், நிலையற்ற தன்மை நிலவுகிறது. இது பயாலஜிகளாக பிறக்காத பிரதமர் உருவாக்கிய பக்கோடா - நாமிக்ஸின் நேரடி விளைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெகுஜனங்களுக்கு பக்கோடாக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு அல்வா! நாட்டில் அதிகரித்து வரும் , வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் வருமான சமத்துவமின்மை ஆகியவற்றுக்குப் பொருளாதாரத்தை இந்த அரசு முறையற்று கையாள்வதே காரணம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MadrasNallaMadras
from Vikatan Latest news
0 Comments