நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள 'கங்குவா' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த விழாவில் சூர்யா, சிறுத்தை சிவா, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாபி தியோல், "இந்த படத்திற்கான அழைப்பு வந்தப்போது எனக்கு இயக்குனர் சிவா பற்றியும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பற்றியும் தெரியாது. ஆனால், இந்த படத்தில் சூர்யா நடிக்கிறார் என்று சொன்னதும், 'ஓகே' சொல்லிவிட்டேன். சூர்யா ஒரு நல்ல நடிகர். இந்த படத்தில் நடித்தது சிறந்த அனுபவம்.
ஒரு படத்தில் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்திருக்கிறேன் என்றால், அது சிவா படத்தில் தான். நான் படப்பிடிப்பு வந்தப்போது, சூர்யா கொடுத்த அன்பு, எனக்கு அவரை இதற்கு முன்பு வாழ்நாள் முழுவதும் முன்னரே தெரிந்ததுப்போல இருந்தது. எங்களிடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளது. நாங்கள் இருவருமே குடும்பம் சார்ந்த நபர்கள்.
சூர்யா மிகவும் பணிவானவர் மற்றும் அடக்கமானவர். அதற்கு அவர் வளர்ப்பு முக்கிய காரணம். இது என்னுடைய முதல் தமிழ் படம். ஞானவேல் ராஜா ஒரு சிறந்த மற்றும் தைரியமான தயாரிப்பாளர். என்னை இந்த படத்தில் ஒரு பகுதியாக ஆக்கியதற்கு நன்றி" என்று பேசினார்.
from Vikatan Latest news
0 Comments