`கங்குவா' திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. சூர்யா, பாபி தியோல் உட்பட படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, சூர்யாவின் 44-வது திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், 45-வது திரைப்படத்தின் இயக்குநர் ஆர். ஜே பாலஜி ஆகியோரும் பங்கேற்றிருக்கிறார்கள்.
எத்தனை வருஷமாக இந்தப் படத்துக்காக காத்திருக்கிறோம். ஆனா, எதுக்காக காத்திருக்கோம்னு ஒரு விஷயம் இருக்கு. இந்தப் படத்தோட போட்டோ பார்த்ததும் இந்தப் படம் பெரிதாக இருக்கும்னு சிவா சார்கிட்ட சொன்னேன். கங்குவா ஆசீர்வதிக்கப்பட்ட படம். சூர்யா அண்ணன், ஆடியன்ஸுக்கு இது போதும்னு நினைக்கமாட்டார். இது போதாதுன்னு சிரத்தையோட வேலை பார்ப்பாரு. அண்ணனோட முதல் திரைப்படத்துல அவருக்கு நடிக்க தெரியல. ஃபைட் பண்ண தெரியலன்னு சொன்னாங்க. அப்போ தினம் 3 மணி நேரம் ஃபைட் கிளாஸ், டான்ஸ் கிளாஸ் போனார்.
`ஆய்த எழுத்து' திரைப்படத்துல நான் உதவி இயக்குநராக இருக்கும்போது ஃபைட் மாஸ்டர் ஒரு சண்டை காட்சிக்கு டூப் போடலாம்னு சொன்னார். ஆனா, அண்ணன் அதைப் பண்ணுவோம்னு பண்ணி விழுந்துட்டாரு. அப்போ ஃபைட் மாஸ்டர் 'உங்க அண்ணன் பெரிய ஃபைட்டராக இருப்பார் போலயே'னு சொன்னார்.
இன்னைக்கு எல்லா ஜிம்லையும் சூர்யா அண்ணன் போட்டோ இருக்கு. எதையெல்லாம் நெகடிவ்னு சொல்றாங்களோ அதையெல்லாம் உழைப்பால் பாசிட்டிவாக மாற்றுவதற்கு நம்ம அண்ணனை தவிர வேறு யாரும் இல்லை. சிவா சார் ஒரு ஹீரோவுக்கு எந்தளவுக்கு மரியாதை கொடுக்கிறாரோ, அதே அன்பையும் மரியாதையையும் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கும் கொடுப்பாரு.
இந்தப் படத்துல பிரமாண்டம் இருந்தாலும் ஒரு அழகான எமோஷனும் இருக்கு. `கைதி - 2' திரைப்படத்தை அடுத்த வருஷம் பண்ணிடுவோம்." என்றவரிடம் `கங்குவா-வில் நீங்கள் நடித்திருப்பதாக தகவல் வருகிறது, உண்மையா அது?' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்தி, " அதை டைரக்டர்கிட்டதான் கேட்கணும்' எனக் கூறி முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
from Vikatan Latest news
0 Comments