விருதுநகரில் வீட்டில் சோபாவுக்கு அடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது குறித்து போலீஸிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் அருகே ரோசல்பட்டியில் இளைஞர்கள் கூட்டாக கஞ்சா புகைப்பதாக போலீஸூக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து சென்ற ஊரக காவல் நிலைய போலீஸார், திரவியநாதபுரத்தை சேர்ந்த சூர்யா (வயது 24), அண்ணாநகரை சேர்ந்தவர் விஜய் (எ) கருப்பசாமி (23) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் இந்த விசாரணையில், இளைஞர்கள் இருவரும் வீட்டில் சோபாவுக்கு அடியில் கஞ்சாவை பொட்டலமாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டுக்கு சென்ற போலீஸார் இருவரின் வீட்டிலிருந்தும் மொத்தம் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சூர்யா மற்றும் விஜய்யை கைதுசெய்த ஊராக காவல் நிலைய போலீஸார், இருவரையும் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சித்ரகலாவிடம் ஒப்படைத்தனர்." என்றனர்.
from Vikatan Latest news
0 Comments