கிளம்பாக்கம் பேருந்து நிலையம்; இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய, புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பேருந்து நிலையத்தில் கடந்த 12-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி, முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் `கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்' இன்று திறக்கப்படவிருக்கிறது. இன்று காலை 11 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் இந்தப் பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.
from Vikatan Latest news
0 Comments