Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்திய அணி தோல்வி: ``BREAKING NEWS; ஆஸ்திரேலியப் பிரதமரின் வீட்டில் அமலாக்கத்துறை!"- கலாய்த்த மஹுவா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. அதன் இறுதி ஆட்டம் இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு மத்தியில் நேற்று அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணைப் பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரிச்சர்டு மார்லஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட பல பிரபலங்களும், முன்னணி வீரர்களும் இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு அகமதாபாத் மைதானத்துக்கு வந்திருந்தார்கள்.

மைதானத்தில் பிரதமர் மோடி - அமித் ஷா

இந்திய அணி தொடர் 10 வெற்றிகளுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. இதில், இந்திய அணி 50 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 240 ரன்கள் எடுத்தது. 241 ரன் இலக்கைக் குறிவைத்து ஆஸ்திரேலிய அணி ஆடியது. ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியாவின் உலகக் கோப்பை கனவு பறிபோனது இந்திய கிரிக்கெட் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையைப் பறிகொடுத்திருக்கிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஆறுதல் தெரிவிக்கும்விதமாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,"இந்த உலகக் கோப்பை தொடரில் உங்களின் திறமை மற்றும் உறுதிப்பாடு குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்துக்கு மகத்தான பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும், எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்" எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி,

பிரதமர் மோடி - ஆஸ்திரேலியா அணித் தலைவர்

மற்றொரு பதிவில், "உலகக் கோப்பை தொடரில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்! இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டம், இன்றைய மகத்தான வெற்றியில் உச்சகட்டத்தை எட்டியது. இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு பாராட்டுகள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு மத்தியில், பா.ஜ.க தங்கள் தோல்விகளுக்கு எப்போதும் நேருவையே குற்றம்சாட்டுவதாகவும், தங்கள் அரசியல் எதிரிகளைக் குறிவைக்க அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், பா.ஜ.க-வை கிண்டல் செய்யும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில்,

எம்.பி மஹுவா மொய்த்ரா

"பிரேக்கிங் நியூஸ்: ஆஸ்திரேலிய பிரதமரின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு... அகமதாபாத் ஸ்டேடியத்தின் பெயர் ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் ஸ்டேடியம் என மாற்றம்... ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

Post a Comment

0 Comments