Ticker

6/recent/ticker-posts

Ad Code

'மாட்டுக்கறி சாப்பிடுற திமிறா?' - கோவை மாணவிக்கு டார்ச்சர்; அரசுப் பள்ளி ஆசிரியர்கள்மீது புகார்!

கோவை அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவியை, `மாட்டுக்கறி சாப்பிடுவியா?’ என்று கேட்டு டார்ச்சர் செய்த ஆசிரியர்கள்மீது புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மாணவியின் தந்தை முகமது உசைன் கூறுகையில், “என் மகள் அசோகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அங்கிருக்கும் ஆசிரியர்கள் அவரைத் தொடர்ந்து, ‘நீ மாட்டுக்கறி சாப்பிடுவியா... அந்தத் திமிறுலதான் இருப்பீங்க’ என்று டார்ச்சர் செய்கிறார்கள்.

முகமது உசைன்

இது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பலமுறை கூறியபோதும் சரியான பதில் இல்லை. டார்ச்சர் குறைந்தபாடில்லை என்பதால், முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்திருக்கிறோம். விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வளிக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்” என்றார்.

இது குறித்து மாணவியின் உறவினர்கள் கூறுகையில், ”ஒரு ஆசிரியர்தான், ‘மாட்டுக்கறி சாப்பிட்டு வாய்  பேசுகிறாயா?’ என்று மிரட்டி, கன்னத்தில் அறைந்திருக்கிறார். மற்றோர் ஆசிரியரும் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். இது குறித்துக் கேட்டதற்கு,

பாதிக்கப்பட்ட மாணவி

ஏதோ நாங்கள்தான் அவர்களை மிரட்டுவதாகக் கூறி பிரச்னையை திசைதிருப்பிவிட்டனர். இதையடுத்து இந்தப் பிரச்னை துடியலூர் காவல் நிலையத்துக்குச் சென்றது. உதவி ஆணையர் எங்கள் மகளுக்கு ஆறுதல் அளித்து பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில் பள்ளிக்குச் சென்ற மாணவிக்கு மீண்டும் மிரட்டல் கொடுத்திருக்கின்றனர். மேலும் அவர் அணிந்திருந்த பர்தா மூலம் எல்லோருடைய காலணிகளையும் துடைக்கச் சொல்லியிருக்கின்றனர். இதனால் பயந்துபோன மகளுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. பள்ளிக்குச் செல்லவே பயப்படுகிறார்.

முதன்மை கல்வி அலுவலர்

இது குறித்து முதல்வரிடமும் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. விசாரித்து ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் மகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

Post a Comment

0 Comments