Ticker

6/recent/ticker-posts

Ad Code

Rajasthan Election: அதிகாலை வரை நீடித்த ஆலோசனைக் கூட்டம்; ஆட்சியைப் பிடிக்க அமித் ஷா, நட்டா வியூகம்!

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு, பா.ஜ.க முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்ற ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் அனைவரும் மீண்டும் காங்கிரஸ் பக்கமே சென்றுவிட்டனர். இதனால் தேர்தலை எதிர்கொள்ள வேட்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்களை பா.ஜ.க தலைமை நியமித்திருக்கிறது. இதே போன்று பக்கத்து மாநிலமான ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலும் பா.ஜ.க-வுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் தலைமை முதல்வர் அசோக் கெலாட்டிடம் முக்கிய பொறுப்புகளை கட்சித் தலைமை ஒப்படைத்திருக்கிறது.

ஜே.பி.நட்டா

இதனால் அவர் தேர்தலை எதிர்கொள்ள பம்பரமாகச் சுழன்று வேலை செய்துவருகிறார். காங்கிரஸை எதிர்கொள்ள, தேர்தல் வியூகம் வகுக்க நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்குச் சென்றார். அவர் ஜெய்ப்பூரிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து தலைவர்களுடன் அதிகாலை 2 மணி வரை ஆலோசனை நடத்தினார். பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவும், உள்ளூர் தலைவர்களும் இந்தத் தேர்தல் வியூக ஆலோசனையில் பங்கேற்றனர். இதில் மத்தியப் பிரதேசத்தைப் போன்று ராஜஸ்தானிலும் மத்திய அமைச்சர்கள், எம்.பி-க்களைச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவைக்க இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.

அமித் ஷா

இதே போன்று ராஜஸ்தானில் பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்துவது இல்லை என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. யாரையாவது முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால் கட்சியில் இருக்கும் கோஷ்டிப்பூசல் காரணமாக வெற்றி பாதிக்கப்படும் என்று கட்சித் தலைமை நினைக்கிறது. தேர்தலில் கட்சி வெற்றிபெற்றால் கஜேந்திர சிங் ஷெகாவத், ராஜ்ய சபா உறுப்பினர் கிரோடி லால் மீனா, மக்களவை உறுப்பினர் தியா குமார், ராஜ்யவர்தன் ரத்தோட் ஆகியவர்களில் ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க கட்சித் தலைமை முடிவுசெய்திருக்கிறது. 70 வயதாகும் வசுந்தரா ராஜே இந்த முறை முதல்வர் வேட்பாளருக்கான களத்தில் நிற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் முதல்வராக இருக்கும் சிவ்ராஜ் சிங் சௌஹானும் இந்த் முறை மீண்டும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் எனக் கூறப்படுகிறது.



from Latest news

Post a Comment

0 Comments