Ticker

6/recent/ticker-posts

Ad Code

`2024-ல் பிரதமர் வேட்பாளராக அதிமுக யாரை முன்னிறுத்தும்?!' - கே.பி.முனுசாமி கூறிய பதில் என்ன?

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால், பல மாதங்களாகவே அதிருப்தியிலிருந்த அ.தி.மு.க., கடந்த திங்களன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தொடர்ந்து அ.தி.மு.க கூறிவருகிறது. இருப்பினும், பா.ஜ.க தரப்பிலிருந்து கூட்டணி முறிவு குறித்து எந்த பதிலும் வரவில்லை.

எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை

இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் உறுதியாகக் கூட்டணி இருக்காது என்று அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ``ஒரு சில மூத்த அரசியல் விமர்சகர்கள், நேரம் வரும்போது சேர்ந்துகொள்வார்கள் என்று மக்களை திசைதிருப்ப முயல்கிறார்கள். ஸ்டாலினும், அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினும், `இவர்கள் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நேரம் வந்தால் இணைந்துவிடுவார்கள்' என்று பயத்தில் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க நிறைவேற்றிய தீர்மானத்தின்படி கூட்டணியிலிருந்து பா.ஜ.க-வை வெளியேற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம். ஒரு கட்சியின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம், அந்தத் தவறை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம். நாங்கள் அவ்வளவு நாகரிகம் தெரியாதவர்கள் இல்லை. 1967-ல் தி.மு.க-வை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்திய பேரறிஞர் அண்ணாவை, வேறு ஒரு கட்சியின் தலைவர் கீழ்த்தரமாக விமர்சனம் செய்கிறார். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கையைப் பற்றிப் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை.

கே.பி.முனுசாமி

ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திராவில் இருக்கும் இரண்டு கட்சிகள் யாரையும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவில்லை. `இந்தியா’ கூட்டணி யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கிறார்கள்...

எனவே, எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் எங்களின் குரல் ஒலிக்கும். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் உறுதியாக கூட்டணி இருக்காது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்திப்போம். தேர்தல் வரும்போது, பா.ஜ.க தனது ஆட்சியில் செய்த தவறுகளை நிச்சயமாகச் சுட்டிக்காட்டுவோம். அ.தி.மு.க சார்பாகவே இதைக் கூறுகிறேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

Post a Comment

0 Comments