Ticker

6/recent/ticker-posts

Ad Code

Doctor Vikatan: பிசிஓடியால் உடலில் அதிகரிக்கும் ரோம வளர்ச்சி, என்ன தான் தீர்வு?

என் தோழிக்கு 23 வயதாகிறது. அவளுக்கு பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளது. அதனால் அவளுக்கு மாதவிடாய் சரியாக வருவதில்லை. பருக்கள் நிறைய இருக்கின்றன. உடல் பருமன், கை, கால்களில் ரோம வளர்ச்சி  போன்ற பிரச்னைகளாலும் அவதிப்படுகிறாள். இதற்கெல்லாம் என்ன தீர்வு?

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் |சென்னை.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

``பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ள பெண்களின் உடலில் நடக்கும் ரசாயன மாற்றங்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது இந்த பாதிப்புள்ள பெண்களின் உடலில்,  ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகமிருக்கும். பொதுவாக பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் என இரண்டு ஹார்மோன்களும் பிரதானமாக இருக்கும். கூடவே மிகக் குறைந்த அளவு டெஸ்டோஸ்டீரான்  ஹார்மோனும் இருக்கும்.

ஆனால் பிசிஓடி பாதிப்புள்ள பெண்களின் உடலில் இந்த டெஸ்டோஸ்டீரான்  ஹார்மோன் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அந்தப் பெண்ணின் உடலில் ஆண்தன்மைக்கான அறிகுறிகள் காணப்படும். உதாரணத்துக்கு நிறைய பருக்கள், தலையில் வழுக்கை, உடலெங்கும் ரோம வளர்ச்சி, கழுத்துப் பகுதியில் கருமை, வயிறு, இடுப்புப் பகுதிகளில் சதை போடுவது போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

உடல் எடை

எனவே உங்கள் தோழியின் விஷயத்தில் நீங்கள் அறிவுறுத்த வேண்டிய முதல் விஷயம் எடைக்குறைப்பு. அவரது பி.எம்.ஐ கணக்கீட்டின்படி, அதிலிருந்தது 5 சதவிகிதமாவது உடல் எடையைக் குறைத்தால் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு குறையும்.

கூடவே எல்.ஹெச் என்ற ஹார்மோனும் குறைந்து, அவரது உடலில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் தோழியை மகளிர்நல மருத்துவரை நேரில் சந்தித்து, இது குறித்து ஆலோசனைகள் பெற்றுப் பின்பற்றச் சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news

Post a Comment

0 Comments