Ticker

6/recent/ticker-posts

Ad Code

``RRR படத்தில் எந்தவொரு மறைமுகமான குறியீடுகளும் இல்லை..." - ராஜமௌலி விளக்கம்!

ராஜமௌலி இயக்கத்தில் 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘RRR’. இப்படத்துக்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்திருந்தார்.

உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸிக்கியின் பிரமாண்ட மாளிகையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் உலகளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வைரலானது. இப்பாடல் சிறந்த பாடலுக்கான 'கோல்டன் குளோப்', 'Hollywood Critics Association' விருதுகளையும் வென்றது. இதையடுத்து மார்ச் 12-ம் தேதி நடைபெறவிருக்கிற 95வது ஆஸ்கார் விருதின் பரிந்துரைப் பட்டியலிலும் இப்பாடல் இடம்பெற்றிருக்கிறது.

ராஜமௌலி
மார்ச் 12-ம் தேதி நடைபெறவிருக்கிற இந்த ஆஸ்கார் விருது விழாவில் கலந்துகொள்ள ராஜமெளலி, ராம் சரண், கீரவாணி (மரகதமணி) உள்ளிட்டோர் 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் ராஜமெளலி அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு 'ஆர்.ஆர்.ஆர்' படம் குறித்து பேசியிருந்தார். அப்போது, 'ஆர்.ஆர்.ஆர்' வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றிருந்த அதேசமயம் அதில் இந்துத்துவா கருத்துகள் திணிக்கப்பட்டிருப்பதாகவும், அதுதொடர்பான குறியீடுகள் திட்டமிட்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு விளக்கமளித்த ராஜமெளலி, "எதையும் தீவிரமாகப் பின்பற்றுவது தவறு. எந்தவொரு தீவிரக் கண்ணோட்டத்தையும், நான் எதிர்க்கிறேன். மறைமுகமான கொள்கைகள் என்று என்னிடத்தில் எதுவும் இல்லை. கடினமாக உழைத்து சம்பாரித்த பணத்தில் என் படங்களுக்கு டிக்கெட் எடுத்து பார்க்கும் மக்களுக்காக நான் படம் எடுக்கிறேன். அவர்களுக்கு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களை மகிழ்விக்க வேண்டும், கதாபாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகளைப் பற்றி வியத்தகு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர்களின் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று நினைக்கிறேன் அவ்வளவுதான்" என்று கூறியுள்ளார்.



from Latest News

Post a Comment

0 Comments