பல நூற்றாண்டுகளைக் கடந்து சித்த மருத்துவம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் அது தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருப்பதுதான். சித்த மருத்துவத்தின் பயனை கொரோனா காலத்தில் மக்கள் உணர்ந்தார்கள். உலக அளவில் கபசுரக்குடிநீரின் அருமை தெரியவந்தது.
சித்த மருத்துவத்தின் நன்மைகளை இன்னும் உலகம் முழுவதும் பரப்புவதற்கு அதன் தேவைகளையும், தேடல்களையும் பற்றி சித்த மருத்துவர்கள் தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு சித்த மருத்துவர்களை ஒரே சமூகமாக கொண்டுவர மதுரை 'மடீட்சியா' (Madurai District Tiny and Small Scale Industries Association) தளம் அமைத்துக் கொடுதது.
சமீபத்தில் மதுரையில் மடீட்சியா நடத்திய 'தற்கால சித்த மருத்துவ ஆய்வுப்பாதை' எனும் நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
`மடீட்சியா’ தலைவர் எம்.எஸ்.சம்பத் தொடக்க உரையாற்றினார். மருத்துவர் கு.சிவராமன் பேசும்போது, ``கொரோனா காலத்தில் சித்த மருத்துவர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. கபசுரக்குடிநீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறி அதை பயன்படுத்த வலியுறுத்தியதால் பலருக்கு நிவாரணம் கிடைத்தது.
இதன் பலனை மக்கள் அறிந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் பக்கங்களிலும் சித்த மருத்துவமும் இடம்பெற்றது. ஆனால் சித்த மருத்துவத்தை `தமிழ் ஆயுர்வேதம்’ என்று கூறும்போது மனவேதனையாக உள்ளது. சித்த மருத்துவத்தின் காலம் மிக தொன்மையானது.’’ என்றார்.
சு.வெங்கடேசன் எம்.பி பேசும்போது, ``இந்தாண்டு பட்ஜெட்டில் ஆயூஷ் துறைக்கு ஒதுக்கீடு ரூ.3640 கோடி. இதில் சித்த மருத்துவத்திற்கான ஒதுக்கீடு வெறும் 90 கோடி ரூபாய் மட்டுமே. அது சம்பளம் மற்றும் அலுவலகச் செயல்பாட்டிற்கே சரியாகிவிடும். ஆனால், ஆயுர்வேத ஆய்வுக்கு சுமார் ரூ. 2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், `கொரோனா பேரிடர் மேலாண்மையில் கபசுரக்குடிநீரை இணைத்தபோது விமர்சனங்களை வைத்தவர்கள், இப்போதும் சித்த மருத்துவத்தின் மீது கேள்விகள் வைத்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த ஆய்வுக் கூட்டத்தில் புதுச்சேரி சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் மருத்துவர் சத்யராஜேஸ்வரன் தன் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார்’ என்றனர்.
தஞ்சை சித்த மருத்துவர் விஜய் விக்ரமன், புதுச்சேரி மண்டல ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மருத்துவர் சத்தியாராஜேஸ்வரன், மருத்துவர் தமிழ்க்கனி, மருத்துவர் ஜெயரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.ஆ
from Latest News
0 Comments