உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபத்தில் உள்ள சிஹானிகேட் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (19). இவர் ராகேஷ் மார்க்கில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் கார் கிளீனராக வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மோஹித் என்ற நபருக்கும், விஜய்க்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த மோஹித் விஜயை தாக்கி அவரை கீழே தள்ளியிருக்கிறார். மேலும், அவர் மீது ஏறி அமர்ந்து, அவரின் அந்தரங்க உறுப்பில் ஏர் பைப்பை சொருகி காற்றை திறந்துவிட்டு, அங்கிருந்து தப்பியிருக்கிறார்.
விஜய் வலி தாங்க முடியாமல் கத்தியிருக்கிறார். அதை கவனித்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். மேலும், காவல்துறைக்கும் தகவல் அளித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறது. இதற்கிடையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் விஜய்க்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை," வாய்த்தகராறுதான் விபரீதத்தில் முடிந்திருக்கிறது. விஜய்யின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மோஹித் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.
from Latest News
0 Comments