டி20 கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்டு வரும் விராட் கோலி மீண்டும் டி20 அணிக்கு திரும்ப வேண்டும் என்கிற குரல் வலுக்கத் தொடங்கி உள்ளது.
நேற்று ராஞ்சியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியாவுக்கு 177 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்வரிசை இளம் வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் 7, இஷான் கிஷான் 4, ராகுல் திரிபாதி 0 என சொற்ப ரன்களில் பலரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் (47), ஹர்திக் பாண்ட்யா (21) ஜோடி சீராக ரன்களை உயர்த்திய போதும் பலனளிக்கவில்லை. இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து கடைசி வரை போராடினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில்தான், டி20 கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்டு வரும் விராட் கோலி மீண்டும் டி20 அணிக்கு திரும்ப வேண்டும் என்கிற குரல் வலுக்கத் தொடங்கி உள்ளது.
2022 டி20 உலகக் கோப்பைக்குப் பின் இதுவரை இந்தியா பங்கேற்ற நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணியே விளையாடியது. தற்போது நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் இந்த அணியே விளையாடி வருகிறது. இந்த 3 தொடர்களிலும் ரோகித் சர்மா உடன் விராட் கோலியும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டு வருவதும் கிரிக்கெட் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 தொடர் மூலம்தான் சிறப்பான கம்பேக் கொடுத்திருந்தார் விராட் கோலி. தொடக்கம் முதலே டி20 கிரிக்கெட்டில் சீராக செயல்பட்டு வரும் விராட் கோலி, 2019ஆம் ஆண்டுக்குப் பின் சதம் அடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை, 2022 ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல்முறையாக டி20 கிரிக்கெட்டில் சதமடித்து அடித்து நொறுக்கினார். அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர், அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தும், இதர வீரர்களின் சொதப்பலால் இந்தியா தோற்றது. இருப்பினும் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்தவர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். அப்படி சிறப்பாக செயல்பட்டும் கோலியை டி20 கிரிக்கெட்டில் ஒதுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக பிசிசிஐ சொல்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்பதே களநிலவரமாக இருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக சீனியர் வீரர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறது பிசிசிஐ. ஒருபுறம் வரவேற்க வேண்டிய திட்டமாக இது இருந்தாலும், மறுபுறம், சிறப்பான ஃபார்மில் இருந்துவரும் விராட் கோலி மாதிரியான அனுபவ வீரர்களைக் கூட டி20 கிரிக்கெட்டில் இருந்து அடியோடு கழற்றி விட முடிவெடுத்துள்ளது சரியா? என்கிற கேள்வி எழுகிறது.
சமீபத்தில் நடந்துமுடிந்த வங்கதேசம், இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி அடுத்தடுத்து சதம் அடித்து உச்சக்கட்ட ஃபார்மில் இருந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்த சதங்கள் வரிசையில் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஏற்கனவே உடைத்துள்ள அவர் 46 சதங்களை அடித்து சச்சினின் 49 சதங்கள் சாதனையையும் விரைவில் முறியடிக்க காத்திருக்கிறார். அப்படிப்பட்ட வீரரை புறக்கணிப்பது இந்திய அணிக்குத் தான் இழப்பு என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
இதுதொடர்பாக இந்திய ரசிகர்கள் ட்விட்டர் வழியாக வைத்த சில கோரிக்கைகள் இங்கே:
No one can replace Virat Kohli in t20i pic.twitter.com/YrFXmP6brc
— . (@stopthatkohli) January 27, 2023
Cricket without Virat Kohli nd Rohit Sharma is like gully cricket
— Simmu (@meownces) January 27, 2023
Agree or agree... pic.twitter.com/k5YGzHBiaK
These two are the heart and soul of Indian Cricket. pic.twitter.com/CwfD4XXsnC
— Vishal. (@SPORTYVISHAL) January 27, 2023
@imVkohli and @ImRo45 after today match #arshdeepsingh #AskStar #Pathaan100crWorldwide #T20Cricket #Cricket pic.twitter.com/dOPzEZJ0Wf
— Anjaan (@aaditya_roy45) January 27, 2023
Hence, we need Virat in T20Is as well.
— Bhawana (@bhawnakohli5) January 27, 2023
Today Missing a Two Goats @imVkohli and @ImRo45... age is just number
— Maddy Smart (@MaddySmart12) January 27, 2023
please select hitrat #hardik #arshdeepsingh pic.twitter.com/kIVnckgiAy
When you look at our openers in T20Is, feels like Rohit Sharma and Virat Kohli can still continue in this format and play 2024 world cup.
— ANSHUMAN (@AvengerReturns) January 27, 2023
Try as hard as you want BCCI but the truth is not a single IPL star of yours can do what Virat Kohli and Rohit Sharma did.
— Avinash (@imavinashvk) January 27, 2023
THEY ARE IRREPLACEABLE. #INDvNZ #ViratKohli #RohitSharma pic.twitter.com/ivno9kWn7z
Indian team is literally nothing without Virat Kohli and Rohit Sharma pic.twitter.com/WIUiJjQx01
— Simmu (@meownces) January 27, 2023
This is what happens when you get your ego ahead of a game by resting the best like @imVkohli and @ImRo45 . Play for the country and not for your ego @hardikpandya7
— Kunal S Narang (@KunalSNarang1) January 27, 2023
Respect seniors first pic.twitter.com/rn1SrKSYCV
Let's laugh at new era without virat and Rohit.#ViratKohli #RohitSharma pic.twitter.com/qPcf7Xuud7
— yr.samar (@YusufRahamani) January 27, 2023
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments