தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம் ராஜஸ்தானில் உள்ள கோயிலில் நடந்தது. அத்திருமண நிச்சயதார்த்தத்தை முறைப்படி அறிவிக்கும் விதமாக நேற்று இரவு தென்மும்பையில் உள்ள அம்பானியின் இல்லமான அண்டிலியாவில் மிகப்பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் நடந்த திருமண நிச்சயதார்த்த பார்ட்டியில் நடிகர் ஷாருக்கான், ரன்பீர் கபூர்-அலியா பட், ஜான்வி கபூர், ரன்வீர் சிங், அயன் முகர்ஜி உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஷாருக்கான் தனது மேலாளர் பூஜாவுடன் வந்திருந்தார். ஆனந்த் அம்பானி சிறுவயதிலிருந்தே ராதிகா மெர்ச்சண்டுடன் பழகி வருகிறார். இதனால் ராதிகா கடந்த சில ஆண்டுகளாக அம்பானியின் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து வந்தார்.
ராதிகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கூட அம்பானியின் ஜியோ வேல்டு சென்டரில்தான் நடந்தது. ராதிகா நியூயார்க்கில் தனது படிப்பை முடித்துவிட்டு 2017ம் ஆண்டு மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிறிது காலம் வேலை செய்தார். இப்போது தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார்.
ஆனந்த் அம்பானியும், ராதிகாவும் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி ஆலயத்திற்கு சென்று திருமணத்திற்கு திருமண நிச்சயதார்த்ததிற்கு முந்தைய சடங்குகளில் ஈடுபட்டனர்.இதில் இரு குடும்பத்தினரும் கலந்து கொண்டு திருமண நிச்சயதார்த்தம் மற்றும் அது தொடர்பான சடங்குகளில் ஈடுபட்டனர். நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் எப்போது இருவருக்கும் திருமணம் என்பது தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஆனந்த் அம்பானிதான் தற்போது முகேஷ் அம்பானியில் எரிசக்தி தொடர்பான அனைத்து தொழில்களையும் கவனித்து வருகிறார். அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கு சமீபத்தில்தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பிரசவம் நடந்தது. அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா திரும்பினர். அவர்களை முகேஷ் அம்பானி விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றார்.
from Latest News
0 Comments