Ticker

6/recent/ticker-posts

Ad Code

நாமக்கல்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்து - கடை உரிமையாளர் உட்பட 4 பேர் பலி

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இன்று காலை திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். தீயை கடும் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து, உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயா மூதாட்டி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர் எனக் கூறப்படுகிறது.

பட்டாசு வெடி விபத்து

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பட்டாசு கடை உரிமையாளர் உள்பட மேலும் இருவர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, இந்த பட்டாசு கடை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்திருக்கிறது. விபத்து குறித்து, மோகனூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் தில்லைகுமார், மூதாட்டி பெரியக்காள், தில்லைகுமாரின் மனைவி பிரியா, தில்லைகுமாரின் தாய் செல்வி ஆகியோர் பலியாகியிருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest News

Post a Comment

0 Comments