Ticker

6/recent/ticker-posts

Ad Code

``அண்ணாமலை ஓர் அரசியல் கோமாளி... அவரைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்!" - செந்தில் பாலாஜி காட்டம்

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகரில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதத்திற்குள் விடுபட்ட சாலைகள் புதுப்பிக்கப்படும். கடந்த ஆட்சியில் சாலைகள் போடப்படவில்லை. ஒரு கட்சித் தலைமைக்குத் தெரியாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவித்தனர்.

செந்தில் பாலாஜி

சரியாக வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள்.  நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறை அல்ல. பாஜக மாநிலத் தலைவர் ஓர் அரசியல் கோமாளி.

அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். கட்சித் தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்ல முடியும்? கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பந்த்தை ரத்து செய்யுங்கள் என சொல்லியிருக்க வேண்டும். ஓர் இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

அண்ணாமலை

ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத நடைமுறை. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை என்னை இன்னும் மேம்படுத்துவதாக எடுத்துக் கொள்கிறேன். ஆளுநர் கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல.

இந்த வழக்கை கோவை காவல்துறை மிகத் திறமையாகக் கையாண்டுள்ளது. மாதக்கணக்கில் டெல்லியில் இருக்கும் வானதி சீனிவாசன் எத்தனை நாள் தொகுதியில் இருந்தார்? அவரதுத் தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கே வானதி வரவில்லை. பாஜக-வினர் அவர்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை முடித்துவிட்டு வரட்டும்.

கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். பாஜக-வினர் அரசியல் ஆதாயம் தேடுவது எடுபடாது” என்றார்.



from Latest News

Post a Comment

0 Comments