Ticker

6/recent/ticker-posts

Ad Code

வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி: வீட்டுல விசேஷம்; இரண்டு புது படங்கள் அறிவிப்பு - உற்சாக மோடில் ரஜினி!

’ஜெயிலர்’ படத்துக்குப் பிறகு லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருப்பது குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் அவரது போயஸ் கார்டன் வீட்டில் நேற்று இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடந்திருக்கிறது.
அது, ரஜினியின் பேரனுக்குத் தொட்டில் போடும் நிகழ்வு மற்றும் பெயர் சூட்டும் விழா.
வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி, சௌந்தர்யா, ரஜினிகாந்த்

ஆமாம், சமீபத்தில் ரஜினி வீட்டுக்குப் புது வரவாக வந்த சௌந்தர்யாவின் குழந்தைக்கு முறைப்படி பெயர் சூட்டித் தொட்டிலில் போடும் நிகழ்வு நேற்று காலை ரஜினியின் வீட்டில் நடந்தது.

ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யாவின் கணவரான விசாகன் வீட்டார் தவிர இரு குடும்பத்துக்கும் நெருக்கமான சிலர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்ததை அறிவித்த போதே தன் மகனுக்கு வைக்கப் போகும் பெயரையும் தெரிவித்திருந்தார் சௌந்தர்யா. ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ என்கிற அந்தப் பெயரை முறைப்படிச் சூட்டி குழந்தையைத் தொட்டிலில் போட்டு எடுத்த பின் மதிய விருந்தும் நடக்க, அதன் பிறகே தன் புதிய படங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிடக் கேட்டுக் கொண்டாராம் ரஜினி.

லைகா தயாரிப்பில் ரஜினி

லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்க இருக்கும் இரு படங்களில் முதல் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 5ம் தேதி தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும், 'டான்' இயக்குநர் சிபி சக்ரவர்த்தியும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் இந்த இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கவிருக்கிறார்கள் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் எதிரொலிக்கிறது.



from Latest News

Post a Comment

0 Comments