உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள குல்மோகர் விகார் பகுதியில் வசிப்பவர் சஞ்சீவ் குப்தா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சஞ்சீவ் குப்தாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சோபிதா குப்தா என்பவருடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இந்தத் தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தம்பதி இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவி சோபிதா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சஞ்சீவ், சோபிதாவின் தந்தை ராஜ்குமார் குப்தாவிடம் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு வந்த ராஜ்குமார் குப்தா மகளின் நிலையை பார்த்து பதறி அழுதிருக்கிறார். இதற்கிடையில், பெண் வீட்டார் சஞ்சீவ் குப்தாவிடம் என்ன நடந்தது என விசாரித்திருக்கிறார்கள். அப்போது அவர்,"நேற்று எப்போதும் போல சண்டை நடந்தது. ஒருகட்டத்தில் அவள் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக தூக்கில் தொங்க முயன்றாள்.
அப்போது நான், `இப்படி நீ செய்தால் அதை வீடியோ எடுத்து உன் வீட்டாருக்கு அனுப்பிவிடுவேன்' எனக் கூறியபின், அவள் அவ்வாறு செய்யவில்லை. அதன் பிறகு நான் இல்லாத நேரத்தில் இப்படி செய்துவிட்டாள்" எனத் தெரிவித்து அந்த வீடியோவையும் காண்பித்திருக்கிறார்.
மனைவி தூக்கு போடும்போது அதை தடுத்து பிறரிடம் கூறி கவுன்சிலிங் தராமல், அதை வீடியோ எடுத்த கணவரின் செயலால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, சஞ்சீவைக் கைதுசெய்து அவரின் செல்போனைக் கைப்பற்றிய போலீஸார், உயிரிழந்த சோபிதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
from Latest News
0 Comments