Ticker

6/recent/ticker-posts

Ad Code

ரஷ்யா: ``மோடி இந்திய நாட்டின் தேசபக்தர்; எதிர்காலம், இனி இந்தியாவுக்கானது" - அதிபர் புதின்

வருடாந்திர வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் சர்வதேச வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மாநாடு நடைப்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "பிரதமர் மோடி இந்திய நாட்டின் தேசபக்தர். அவரது 'மேக் இன் இந்தியா' யோசனை பொருளாதார ரீதியாக முக்கியமானது. அவர் தலைமையில் நிறைய முன்னேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு சொந்தமானது.

புதின்

மற்றவர்கள் இந்திய நாட்டின் மீதான எந்தவொரு தடையையோ அல்லது கட்டுப்படுத்துதலயோ முயற்சி செய்தாலும், தனது தேசத்தின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மேற்கொள்ளும் திறன் கொண்டவர்களில் மோடியும் ஒருவர். பிரிட்டிஷ் காலனியாக இருந்து நவீன நாடாக இந்தியாவின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. கிட்டத்தட்ட 1.5 பில்லியன் மக்களின் உறுதியான வளர்ச்சி முடிவுகள், இந்தியா மீதான அனைவரின் மரியாதைக்கும், அபிமானத்திற்கும் காரணமாகும்.

இந்தியாவுடன் எங்களுக்கு பல தசாப்தங்களாக இருக்கும் நெருங்கிய நட்புறவால் பிணைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கடினமான பிரச்னைகளுக்கு ஆதரவளித்ததில்லை. எதிர்காலத்திலும் இதுவே தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்திய விவசாயத்திற்கு மிகவும் முக்கியமான உரங்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு, பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால் நாங்கள் உரம் உற்பத்தி அளவை 7.6 மடங்கு அதிகரித்துள்ளோம். அதனால், விவசாய வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

மோடி, புதின்

இந்தியாவுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மேலும், உலகளாவிய விவகாரங்களில் அதன் பங்கு முக்கியமானது என்று நான் நம்புகிறேன். உக்ரைன் மீதான அணு ஆயுதத் தாக்குதல் என்ற எச்சரிக்கையின் மூலம் ரஷ்யா எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக விரும்பினோம். மற்றபடி அணு ஆயுதங்களால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது அர்த்தமற்றது. அதற்கான தேவை இல்லை என்று எங்களுக்கு தெரியும். அத்தகைய தாக்குதலில் எந்த அர்த்தமும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.



from Latest News

Post a Comment

0 Comments