Ticker

6/recent/ticker-posts

Ad Code

மகனை தாக்கிய சக மாணவன் மீது ஆத்திரம்; இரும்புக் கம்பியால் தாக்கி படுகாயமடையச் செய்த பெண் கைது!

சேலம், காடையாம்பட்டி அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் இருவர், அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று ஒன்றாக விளையாடி கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஒரு மாணவன் தன் தாயிடம் சென்று தெரிவித்துள்ளார். உடனே அவர் தன் மகனை தாக்கிய மாணவனின் வீட்டுக்குச் சென்று, சத்தமிட்டு சண்டையிட்டதுடன், அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து அந்த மாணவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

கைது

இதில், தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த அந்த மாணவனை மீட்ட அவன் உறவினர்கள், ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரும்புக் கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவனுக்கு சிறு மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் அவரை தாக்கிய சக மாணவனின் தாய்மீது வழக்கு பதிந்து கைதுசெய்து... சேலம் பெண்கள் சிறையில் அவரை அடைத்தனர்.



from Latest News

Post a Comment

0 Comments