Ticker

6/recent/ticker-posts

Ad Code

`ப்ளீஸ் வெளிய போயிடுங்க...’ - வனத்துறை அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட திருச்சி கலெக்டர்

ஒவ்வொரு மாதமும் கடைசி வார வெள்ளிக்கிழமையன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், அக்டோபர் மாதத்திற்காக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, வேளாண் துறை, கூட்டுறவுத் துறை, மின்வாரிய அதிகாரிகள் உள்பட விவசாயப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

`விவசாய நிலங்களில் விதைக்கப்படும் பயிர்களை மயில்களும், காட்டுப் பன்றிகளும் கடுமையாக சேதப்படுத்துகின்றன. இதனால் மகசூல் பாதிக்கப்படுகிறது. இந்த பயிர் சேதத்தைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாகவே குறைதீர்க்கும் கூட்டங்களில் விவசாயிகள் புகார் சொல்லி வந்தனர். மேலும், ‘விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில் வனத்துறை உயரதிகாரிகள் கலந்துகொள்வதில்லை’ எனவும் புகார் கூறி வந்தனர்.

கூட்ட அரங்கை விட்டு வெளியேறிய வனச்சரகர்கள்

அந்தவகையில், கடந்த கூட்டத்தின் போதே, ‘இந்தப் பிரச்னைக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் தெரிவிப்பதோடு, வனத்துறை உயரதிகாரிகள் அடுத்த கூட்டத்தில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும்’ என கலெக்டர் பிரதீப் குமார் கூறியிருந்தார். இப்படியான நிலையில் நேற்றைய கூட்டத்திற்கு வனத்துறை உயரதிகாரிகள் வராமல், வனச்சரகர்களை மட்டுமே அனுப்பி வைத்திருந்தனர். இதனைப் பார்த்து கடுப்பான கலெக்டர் பிரதீப் குமார், `அடுத்த கூட்டத்திற்கு உயரதிகாரிகள் வரணும்னு சொல்லியிருந்தும் ஏன் வரலை..! தயவுசெஞ்சு நீங்களும் வெளிய போயிடுங்க’ என்கிற ரீதியில் கடுப்பாகி ‘கோ அவுட்’ எனச் சொல்ல, வனச்சரகர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். கலெக்டரின் இந்த செயலைப் பார்த்து வியந்த விவசாயிகள், கைதட்டி கலெக்டர் முடிவை வரவேற்றனர்.  



from Latest News

Post a Comment

0 Comments