வரும் 9ம் தேதியிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 6. இந்தாண்டு இருபதுக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருப்பதால் பிக் பாஸ் வீட்டுக்குள் கலகலப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. மேலும் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் 24 மணி நேரமும் நிகழ்ச்சியைப் பார்க்க வழி செய்திருக்கிறார்கள்.
போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக் பாஸ் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு நேற்று முன்தினம் முதல் க்வாரன்டீன் தொடங்கியது. பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என 17 பேர் அடங்கிய பட்டியலை நாம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அது குறித்த விவரங்களை கீழேயிருக்கும் இணைப்புகளில் பார்க்கலாம்.
சினிமா, சின்னத்திரைப் பிரபலங்களுடன் இந்த முறை பொது மக்களிலிருந்தும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே ஆயிரக்கணக்கானோர் ‘ஏன் பிக் பாஸில் கலந்துகொள்ள நினைக்கிறோம்’ என்பதை விளக்கி வீடியோ எடுத்து சேனலுக்கு அனுப்பி வைத்தார்களாம். அவற்றைப் பரிசீலித்து அவர்களிலிருந்தும் சிலர் தேர்வாகி இருக்கின்றனராம்.
அந்தப் பட்டியலில் இருக்கும் சிலர் குறித்தும் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது மேலும் மூன்று பேர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் யார் எனப் பார்க்கலாமா?
ஷெரினா
சென்னையைச் சேர்ந்த இவர் ஒரு சூப்பர் மாடல் என்கிறார்கள். பார்ப்பதற்கு யாஷிகா ஆனந்த் சாயலில் இருக்கும் இவர் சினிமாவுக்கு முயற்சி செய்து வருகிறாராம்.
ஜனனி
வெளிநாடு வாழ் தமிழர் கோட்டாவின்படி இலங்கையிலிருந்து வருகிறார். அங்கு ஆங்கராகப் பணிபுரிந்து இருக்கிறாராம்.
ஏ.டி.கே
இவர் மலேசியாவைச் சேர்ந்தவர்.
இந்தப் புது போட்டியாளர்கள், மற்ற போட்டியாளர்களுக்கு முன் தாக்குப் பிடிப்பார்களா? கமென்ட்டில் சொல்லுங்கள்.
from Latest News
0 Comments