Ticker

6/recent/ticker-posts

Ad Code

`மெசெஜ் அனுப்பி 4 மணி நேரம், நோ ரிப்ளை; என்னவாயிருக்கும்?' - தோழியின் வீட்டுக்கு டிரோன் அனுப்பியவர்

`உன்னை பிடிச்சது விடாது, உன்னை தொரத்திட்டே வரும்’ என்ற வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நண்பர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். `நான் பாட்டுக்கு ஒரு ஓரமாதானடா இருந்தேன், எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கப் பாத்தியா?’ என்பதுபோல, பலருக்கு அவர்கள் நண்பர்களின் செயல்கள் அமைந்துவிடும்.

Friends (Representational Image)

இன்னும் சொல்லப்போனால், ஒருநாள் பேசவில்லை, மெசேஜ் செய்யவில்லை எனில், `இவர் இறந்துவிட்டார்’ என மீம் க்ரியேட் செய்து அனுப்பும் அளவுக்கு அலப்பறை பிடித்த நண்பர்களும் உண்டு. ஆனால் அதுக்கும் மேலே போய் ஒருபெண், 4 மணி நேரமாக தன் தோழி மெசேஜ் செய்யவில்லை என்பதற்காக, அவர் வீட்டிற்கே டிரோன் அனுப்பி, அவர் அப்படி என்னதான் செய்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறார்.

சீனாவில் வசிக்கும் வான் என்ற பெண், இதய பிரச்னையால் பாதிக்கப்பட்டு, சுகவீனமாய் இருந்துள்ளார். அக்டோபர் 22-ம் தேதி காலை 7 மணியளவில் தோழிக்கு தனது சுகவீனம் குறித்து மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அவரின் தோழி பக்கத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பிற்கு செல்லும்படியும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.

அதோடு, `நன்றாக இருக்கிறாயா? அங்கு என்ன நடக்கிறது? எல்லாம் சரிதானே? இரண்டு முறை போன் செய்து விட்டேன்... ஏன் எடுக்கவில்லை?’ எனப் பல மெசேஜ்களை அனுப்பி உள்ளார். ஆனால், வானிடம் இருந்து ஒரு மெசேஜூம் வரவில்லை. நான்கு மணி நேரமாகியும், எந்தவொரு ரிப்ளையும் இல்லாததால், தன் கணவரிடம் டிரோன் மூலமாக என்னாயிற்று எனப் பார்க்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

தோழிகள் இருவரின் வீடும் அருகில்தான் என்பதால், டிரோன் விரைவில் வான் வீட்டின் ஜன்னலை அடைந்தது. இது எதுவும் தெரியாத வான், களைப்பாக இருந்ததால் அப்படியே படுத்து உறங்கி உள்ளார். ஜன்னல் வழியாக வந்த டிரோனை பார்த்ததும், எழுந்து சென்றுள்ளார்.

தான் ஏன் மெசேஜுக்கு நீண்ட நேரமாக ரிப்ளை அனுப்பவில்லை, என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக தன் தோழி இப்படிச் செய்துள்ளார் என்பது பின்பு தெரிய வர, இந்த நிகழ்வை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் வான். இந்தச் சம்பவம் நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்று வைரலாகியுள்ளது.



from Latest News

Post a Comment

0 Comments