Ticker

6/recent/ticker-posts

Ad Code

தென் கொரியா : ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது 146 பேர் மரணம், 150 பேர் படுகாயம்!

கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பண்டிகைகள் முடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து, எல்லா நாடுகளிலும் பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள ஒரு முக்கியமான சந்தை ஒன்றில், ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்காகத் திரளான மக்கள் கூடியிருந்தனர் . நேற்று (29-10-22) இரவு சுமார் 1 லட்சம் மக்கள் மத்திய மாவட்டமான இட்டாவோனில் பண்டிகைக்காகக் கூடினர் என உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாகப் பலர் மயங்கியுள்ளனர். அதை அடுத்து, தீயணைப்புத் துறைக்கு இரவு 10:30 மணியளவில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே 100-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொது மக்களும் மற்றவர்களுக்கு CPR முறையில் முதலுதவி செய்வது போன்ற காணொளிகள் வெளிவந்துள்ளன.

மீட்புப் பணிகளில் சுமார் 140 அவசர வாகனங்களும் 300 ஊழியர்களும் வந்துள்ளனர். "ஆனால் அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒன்பதிலிருந்து 59- ஆகத் தொடர்ந்த சாவு எண்ணிக்கை 149- ஆக உயர்ந்துள்ளது" என்று செய்தி நிறுவனமான PTI கூறியுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கிக் குறைந்தது 146 பேர் இறந்துள்ளனர் மற்றும் 150 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பெரும்பாலும் காயமடைந்தவர்கள் 20 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் என்கிறது தென் கொரியாவின் உள்ளூர் ஊடகம்.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி யூன் சுக்-யோல் தன் செய்தித் தொடர்பாளர் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டார்: "பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தலைமையிலான அனைத்து அமைச்சர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கும் வகையில் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்", என்று கூறியுள்ளார்.



from Latest News

Post a Comment

0 Comments