Ticker

6/recent/ticker-posts

Ad Code

அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட எட்வெர்ட் ஸ்னோடென் - ரஷ்ய குடியுரிமை வழங்கிய புதின்!

எட்வர்ட் ஜோசப் ஸ்னோடென்(39) அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆவார். அமெரிக்காவின் (தேசிய பாதுகாப்பு முகமை) உளவுத்துறையில் ஊழியராகவும் ஒப்பந்ததாரராகவும் பணியாற்றி வந்த இவர் கடந்த 2013 -ம் ஆண்டு பல ரகசிய தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க நாட்டின் வழக்குகளில் இருந்து தப்பிக்க 2013 -ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் வசித்து வருகிறார்.

விளாடிமிர் புதின்

இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமா, ஸ்னோடென்-க்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.

ஆஸ்திரியா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சம் அடைய உதவி கோரினார் எட்வெர்ட் ஸ்னோடென். அனைத்து நாடுகளும் அவரின்கோரிக்கையை நிராகரித்தன. பின்னர் தான், ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார்.

2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்று காரணமாகவும் மூடப்பட்ட எல்லைகளின் காரணமாகவும், தனது வருங்கால மகன் பிரிக்கப்படக்கூடாது என்பதற்காக தானும் தன்னுடைய கர்ப்பமாக இருந்த மனைவியும் ரஷ்ய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதாக ஸ்னோடென் கூறினார். அதே ஆண்டு ரஷ்யா, நிரந்தர தங்கும் உரிமையை வழங்கியது. இதுவே தற்போது ரஷ்ய குடியுரிமை பெற வழி வகுத்தது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( 26.09.2022) தற்போது அவருக்கு குடியுரிமை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

யார் இந்த எட்வெர்ட் ஸ்னோடென்?

நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக ஈராக் போரில் போரிட வேண்டிய கடமையை உணர்ந்து ஸ்னோடென் மே மாதம் 2004 இல் அமெரிக்காவின் ராணுவத்தில் சேர்ந்தார்.

ஸ்னோடென்

பின்னர் 2006 ஆம் ஆண்டு உளவுத்துறை நிறுவனங்களை மையமாகக் கொண்ட வேலை முகாமில் கலந்துகொண்டு , சிஐஏ வில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். ஏஜென்சி அவரை வெர்ஜீனியாவின் லாங்கிலி நகரில் உள்ள சிஐஏ தலைமையகத்தில் உலகளாவிய தகவல் தொடர்பு பிரிவில் பணியில் நியமித்தது. 2009 இல் ஸ்னோடென் பல அரசாங்க நிறுவனங்களுக்கான கணினி அமைப்புகளை நிர்வகிக்கும் டெல் (Dell) நிறுவனத்திற்கு ஒப்பந்ததாரராக பணிபுரிய தொடங்கினார். இதன் பின்னர், அதாவது 2013 -ம் ஆண்டு பல ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.



from Latest News

Post a Comment

0 Comments