Ticker

6/recent/ticker-posts

Ad Code

`எது உண்மையான சிவசேனா?’ - தேர்தல் கமிஷன் முடிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி | யாருக்கு பின்னடைவு?

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்துள்ளது. தங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்று ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உத்தவ் தாக்கரே தங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்த போது, எந்தஅணி உண்மையான சிவசேனா என்று முடிவு செய்யவேண்டாம் என்று தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதோடு இது தொடர்பான விசாரணையை அரசியல் சாசன பெஞ்ச்-க்கு மாற்றினர். இவ்வழக்கு அரசியல் சாசன டிவிஷன் பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்

முதல் முறையாக வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. யூடியூப் மூலம் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. உத்தவ் தாக்கரே தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் தலைமையிலான வழக்கறிஞர்கள் வாதாடினர். வழக்கறிஞர் நீரஜ் கிஷன் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரானார். இரு தரப்பு வாதஙகளையும் கேட்ட நீதிபதிகள் தேர்தல் கமிஷன் உண்மையான சிவசேனா எது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு உத்தவ் தாக்கரேயிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 39 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 12 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. இதனால் தேர்தல் கமிஷன் முடிவு ஷிண்டே அணிக்கு சாதகமாக மாற வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து ஏக்நாத் ஷிண்டே அரசு பதவியேற்றபோது அரசுக்கு ஆதரவான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் மீது கட்சித்தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் உத்தவ் தாக்கரே தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அம்மனு மீது முடிவு செய்யப்படும் வரை உண்மையான சிவசேனா எதுவென்று முடிவு செய்யக்கூடாது என்று உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News

Post a Comment

0 Comments