காஃப் வித் கரண் 7 இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்முறை இந்நிகழ்ச்சி ஒடிடி தளத்தில் மட்டும் ஒளிபரப்பப்பட்டது. இதில் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இறுதி எபிசோட்டில் கண் ஜோகர் நடிகை கத்ரீனா கைஃப் திருமணம் குறித்து பேசியுள்ளார். கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளஷல் திருமணம் ராஜஸ்தானில் நடந்தது. இத்திருமணத்திற்கு பாலிவுட்டில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. கத்ரீனா கைஃப்பை பாலிவுட்டில் குறிப்பிட்ட உயரத்திற்கு கொண்டு சென்ற நடிகர் சல்மான் கானுக்கு கூட அழைப்பு இல்லை. இது தவிர இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகருக்கும் அழைப்பு இல்லை.
இது குறித்து கரண் ஜோகர் காஃபி வித் கரணில் பேசினார். கத்ரீனா கைஃப்-விக்கி திருமணத்திற்கு பிறகு பலரும் என்னிடம் ஏன் உங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும், உங்களுக்கும் கத்ரீனாவிற்கு நல்ல நட்புதானே இருந்தது என்றும் கேட்டனர். சிலர் என்னிடம் நீங்கள் திருமணத்தில் கலந்து கொண்டீர்கள் என்னிடம் சொல்லவே இல்லை என்று தெரிவித்தனர். அவர்களிடம் என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று சொல்ல எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. திருமணத்திற்கு பிறகு என் மீது அனுதாபமும், சந்தேகமும் வந்தது. உங்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை.
உங்களுக்கும், திருமண தம்பதிக்கும் எந்த வித பிரச்னையும் இல்லையே என்று கேள்வி எழுப்பினர். திருமணத்திற்கு அனுராக் காஷ்யப்பையும் அழைக்கவில்லை என்று தெரிந்த போது மனதிற்கு சற்று அமைதி ஏற்பட்டது. விக்கி கெளஷல் அனுராக்கிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்று தெரிவித்தார். வரும் 29ம் தேதி இறுதி எபிசோட் ஒளிபரப்பாகிறது.
from Latest News
0 Comments