Ticker

6/recent/ticker-posts

Ad Code

பூசாரி பேச்சைக் கேட்டு தனக்கு தானே சமாதி கட்டிய இளைஞர்; கைது செய்த போலீஸ் - நடந்தது என்ன?!

ையில்மத நம்பிக்கையுடையவர்களை, ஆன்மிகவாதிகள் என்ற பெயரில் சிலர் ஏமாற்றி பணம் பறிப்பதை வேலையாகவே வைத்திருக்கின்றனர்.

பில்லி சூனியம்

அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், பூசாரிகளின் பேச்சைக் கேட்டு தனக்குத்தானே சமாதி செய்து அதனுள் படுத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களில் வெளியான தகவலின்படி இந்த சம்பவம், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்திலுள்ள தாஜ்பூர் கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 3 பூசாரிகள், ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கில், சுபம் கோஸ்வாமி என்ற இளைஞனிடம், நவராத்திரி விழா தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக சமாதி செய்தால் ஞானம் அடையலாம் என்று கூறியிருக்கின்றனர்.

சமாதியிலிருந்து மீட்கப்படும் இளைஞன்

அந்த இளைஞரும் பூசாரிகளின் பேச்சைக் கேட்டு, 6 அடி குழி தோண்டி அதனுள் தானே படுத்துக்கொண்டு மூங்கில் கொண்டு மூடியிருக்கிறார். பின்னர் இதைக்கண்டு பதற்றமடைந்த கிராமவாசிகள், போலீஸிடம் தகவலளிக்க, போலீஸாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, சமாதியிலிருந்து அந்த இளைஞரை மீட்டனர். அதோடு, மீட்கப்பட்ட இளைஞர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட பூசாரிகள் என மொத்தம் 4 பேரைக் கைதுசெய்தனர். மேலும், போலீஸார், அந்த இளைஞனை மீட்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



from Latest News

Post a Comment

0 Comments