நிறம் குறித்த விமர்சனங்கள், கிண்டல், கேலிகள் உலகம் முழுவதும் இருக்கிறது. அது தவறு என எத்தனை சட்டம் போட்டாலும், தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், தனது நிறம் குறித்துப் பேசிய கணவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் மனைவி ஒருவர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் உள்ள அம்லேஷ்வர் என்ற கிராமத்தில் வசித்தவர் ஆனந்த் சோனாவானே(40). இவரது மனைவி சங்கீதா. சங்கீதா சற்று கருப்பாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி ஆனந்த் தனது மனைவியை மோசமான வார்த்தைகளால் திட்டுவதோடு, அடிக்கடி மனைவியின் நிறத்தை சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தார்.
இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் இதே பிரச்னையில் இருவருக்கும் இடையே இரவில் மீண்டும் சண்டை வந்தது. இருவரும் கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டனர். இதில் கடும் கோபம் அடைந்த சங்கீதா வீட்டில் கிடந்த கோடாரியை எடுத்து வந்து தனது கணவரை வெட்டினார். ரத்தவெள்ளத்தில் சரிந்த கணவனை அதோடு விடாமல், தனது கணவரின் மர்ம உறுப்பையும் வெட்டி துண்டாக்கினார். காலையில் தனது கணவரை யாரோ கொலை செய்துவிட்டதாக சங்கீதா சொல்லி இருக்கிறார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து சங்கீதாவிடம் தீவிர விசாரணை நடத்திய போது தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீஸார் சங்கீதாவை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். ஆனந்த்தின் முதல் மனைவி இறந்து போனார். இதனால் இரண்டாவதாக சங்கீதாவை ஆனந்த் திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News
0 Comments