Ticker

6/recent/ticker-posts

Ad Code

தேனி: செப்டிக் டேங்க்கில் விழுந்து 2 சிறுமிகள் பலி; கொதிப்பில் சாலை மறியலில் இறங்கிய மக்கள்!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அமைந்திருக்கிறது பண்ணைப்புரம் பேரூராட்சி. அங்கிருக்கும் பாவலர் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிகிதாஸ்ரீ (7), மேற்குத் தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ் மகள் சுபஸ்ரீ (6) ஆகியோர் அந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ​2-ம் வகுப்பு படித்து வந்தனர். 

செப்டிக் டேங்க்

​இந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள  பெண்கள் பொது சுகாதார வளாகத்தின் ​செப்டிக் டேங்க் மேல் பகுதியில் சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியின் சிமென்ட் கல் மேல் மூடி உடைந்ததில் சிறுமியர் இருவரும் தவறி தொட்டிக்குள் விழுந்தனர்.

​சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் குழிக்குள் விழுந்த இருவரையும் மீட்டனர்.‌ அதில் நிகிதாஸ்ரீ ​நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானார். சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுபஸ்ரீ செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ​இதையடுத்து ​சிறுமிகளின் உறவினர்கள் உத்தமபாளையம் - தேவாரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பல ஆண்டுகள் பழைமையான கழிவுநீர்த் தொட்டியை முறையாகப் பராமரிக்காத பேரூராட்சியின் அலட்சியத்தாலே இந்த உயிர் பலி ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி ​​2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். 

மறியல்

​தகவலறிந்து வந்த உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சிறுமிகள் மரணத்துக்கு நீதி கிடைக்கும் எனவும் உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறுமிகள் மரணம் குறித்து கோப்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான சிறுமிகள்

​கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சமத்துவபுரம் பூங்காவில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த 8​ ​வயது சிறுமி பலியான சோகத்தின் வடு மறைவதற்குள், தற்போது 2​ ​சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்ட மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



from Latest News

Post a Comment

0 Comments