Ticker

6/recent/ticker-posts

Ad Code

வேப்பிடு, புலுசு, பச்சடி... ஆந்திரா ஸ்பெஷல் விருந்து | வீக் எண்டு ரெசிப்பீஸ்

தொண்டக்காய் வேப்பிடு (கோவைக்காய் வறுவல்)

தேவையானவை:

கோவைக்காய் - 200 கிராம்

மிளகாய்த்தூள் - 2 மீடியம் ஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 100 கிராம்

தொண்டக்காய் வேப்பிடு (கோவைக்காய் வறுவல்)

செய்முறை:

கோவைக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் நீங்கலாக மற்ற பொருள்களைச் சேர்த்துக் கலக்கி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சுரைக்காய் புலுசு (சுரைக்காய் குழம்பு)

தேவையானவை:

சுரைக்காய் - கால் கிலோ

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 4 பல்

சீரகம் - ஒரு சிட்டிகை

புளி - ஒரு எலுமிச்சை அளவு

சிறிய தக்காளி - ஒன்று

நல்லெண்ணெய் - 200 கிராம்

வெந்தயம் - ஒரு சிட்டிகை

கடுகு - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

சுரைக்காய் புலுசு (சுரைக்காய் குழம்பு)

செய்முறை:

சுரைக்காயைத் சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வறுக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் கிளறி, அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும். பின்பு சுரைக்காயை அதில் சேர்க்கவும். பின்பு ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். காய் வெந்தபின் புளிக்கரைசலைச் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து இறக்கவும்.

கந்தி பப்பு புல்ல கூரா (வறுத்த பருப்பு மசியல்)

தேவையானவை:

துவரம்பருப்பு - ஒரு கப்

காய்ந்த மிளகாய் - 6

புளி - எலுமிச்சை அளவு

மல்லி (தனியா) - ஒரு மீடியம் ஸ்பூன்

சீரகம் - ஒரு சிட்டிகை

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

நல்லெண்ணெய் - உப்பு - தேவைக்கேற்ப

கந்தி பப்பு புல்ல கூரா (வறுத்த பருப்பு மசியல்)

செய்முறை:

குக்கரில் எண்ணெய்விட்டு கொடுக்கப் பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் (புளி நீங்கலாக) வறுத்து, டம்ளர் தண்ணீர்விட்டு நான்கு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். புளியைத் தனியாக வேகவைத்து சேர்த்து நன்கு கலக்கவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

தோசைக்காய்ப் பச்சடி (தோசைக்காய்ச் சட்னி)

தேவையானவை:

தோசைக்காய் (சிறியது - 150 கிராம்) - ஒன்று (தோல் சீவி நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் - 5

புளி - சிறிதளவு

தனியா - ஒரு மீடியம் ஸ்பூன்

சீரகம் - ஒரு சிட்டிகை

நல்லெண்ணெய் - 75 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

கடுகு,உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு

தோசைக்காய்ப் பச்சடி (தோசைக்காய்ச் சட்னி)

செய்முறை

தோசைக்காயைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் எண்ணெயில் வதக்கி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அத்துடன் தோசைக்காயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.



from Latest News

Post a Comment

0 Comments