Ticker

6/recent/ticker-posts

Ad Code

சந்தனம் கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு.. ஜவானில் விஜய்சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?!

கோலிவுட்டின் மசாலா பட இயக்குநர்களில் முன்னணியில் இருக்கும் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஜவான் படம் ஷாருக்கானிற்கு நல்ல கம்பேக்கை கொடுக்குமா இல்லையா என்பதை தாண்டி அட்லீயின் இயக்கம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

நயன்தாரா, யோகிபாபு, பிரியாமணி நடிக்கும் இந்த படம் 2023ம் ஆண்டு ஜூன் 2ல் தமிழ், இந்தி,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது என்றும், ஜவான் படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது என்பதே சமீபத்திய செய்தியாக இருக்கிறது.

இப்படி இருக்கையில், கோலிவுட்டில் ரஜினி, விஜய் என பல மூத்த நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, ஷாருக்கானிற்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி மற்றும் ஷாருக்கான் இடம்பெறும் காட்சிக்கான ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

image

இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு 21 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதுபோக, இந்த சம்பளம்தான் விஜய் சேதுபதியின் திரை வாழ்விலேயே கொடுக்கப்படும் அதிகபட்சமான சம்பளம் என்றும், கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சந்தானம் கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய் சேதுபதி தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதனிடையே ஜவானில் நடிகர் விஜய்யும் கேமியோவில் வருவதாகவும் அண்மையில் வெளியான புகைப்படத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது. ஆனால், படக்குழு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றும் குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments