Ticker

6/recent/ticker-posts

Ad Code

`சபதம் நிறைவேறாமல் குளிக்க மாட்டேன்...’ - 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் பீகார் மனிதர்

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் தர்மதேவ். 40 வயதான இவர் கடந்த 22 ஆண்டுகளாக குளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தனியார் ஊடகத்துக்கு தர்மதேவ் அளித்த பேட்டியில், "மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 1975-ம் ஆண்டு பணியாற்றிவந்தேன். 1978-ல் திருமணமும் செய்துகொண்டேன். அப்போது திடீரென பெண்களுக்கு எதிரான வன்முறைகள், விலங்குகளை கொல்லுதல், நிலத்தகராறு போன்றவை அதிகரிப்பதை உணர்ந்தேன்.

பெண் குழந்தைகள் மீதான வன்முறை

அதைத் தொடர்ந்து எனக்கான குருவைத் தேடி கண்டறிந்தேன். அதை முழுமையாக பின்பற்றினேன். அப்போது முதல் இப்போது வரை ராமரை தினமும் தியானித்துவருகிறேன். இந்த நிலையில் தான், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், விலங்குகளை கொல்லுதல், நிலத்தகராறு போன்றவை எப்போது முற்றிலுமாக நிறுத்தப்படுகிறதோ அப்போது தான் குளிப்பது என சபதமேற்றேன். அதை இப்போது வரை பின்பற்றியும் வருகிறேன். நான் குளிப்பதில்லை என்பதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டேன். இப்போதும் யாரும் வேலை கொடுப்பதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

குளிக்காமல் இருக்கும் பீகார் மனிதர் தர்மதேவ்

மேலும், கிராம மக்கள் தர்மதேவ் தொடர்பாக பேசுகையில்... `இவரின் மனைவி, மூத்த மகன் இறந்த போது கூட குளிக்காமல், இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தார். இவருக்கு இது வரை எந்த நோயும் வந்து நாங்கள் பார்த்தது இல்லை' எனவும் ஆச்சர்யமாக தெரிவிக்கிறார்கள்.



from Latest News

Post a Comment

0 Comments