Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொட்டிக் கிடக்கும் தங்கம், KGF-ஐ விடப் பெரிய தங்க வயல்: 222 மில்லியன் டன் தங்கத்தை எடுக்க அனுமதி

பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுய் மாவட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தை ஆய்வுசெய்ய அந்த மாநில அரசு அனுமதி வழங்க முடிவு செய்திருக்கிறது. கர்நாடகாவில் உள்ள `KGF' எனப்படும் கோலார் தங்க வயலைவிடப் பீகாரில் உள்ள இந்த தங்க வயலில் அதிக அளவு தங்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியப் புவியியல் ஆய்வு (GSI) கணக்கெடுப்பின்படி, ஜமுய் பகுதியில் உள்ள சுரங்கத்தில் 222.88 மில்லியன் டன் தங்க வளம் மற்றும் 37.6 கனிம வளம் நிறைந்த தாதுகள் இருக்கின்றனவாம். அதனால் பீகார் மாநில சுரங்கம் மற்றும் புவியியல் துறையானது, சுரங்கம் தோண்டும் முயற்சியில் தேசிய கனிம வளர்ச்சி கழகம் (NMDC) போன்ற நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறது.

பீகார் முதல்வர் நிதிஷ் பகுமார்

இது குறித்து தலைமைச் செயலர் மற்றும் சுரங்க ஆணையர் ஹர்ஜோத் கவுர் கூறுகையில் ஊடகங்களிடம் பேசுகையில், ``ஜமுய் மாவட்டத்தில் உள்ள கர்மாதியா, ஜாஜா, சோனா போன்ற பகுதிகளில் தங்கம் இருப்பதைக் குறிக்கும் GSI கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த செயல்முறை தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும், மாநில அரசு இன்னும் ஒரு மாதக் காலத்துக்குள் சென்ட்ரல் ஏஜென்சி அல்லது பிற ஏஜென்சிகளுடன் முதற்கட்ட (G3) ஆய்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பிருக்கிறது" என்றார்.

பீகாரின் தங்க வளம்:-

ஜமுய் பகுதி தென்கிழக்கு பீகார்-ஜார்கண்ட் மாநிலத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் தங்கக் கையிருப்பில் அதிக பங்கு தங்கம் பீகாரில்தான் இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த ஆண்டு மக்களவையில் தெரிவித்திருந்தார்.

தங்கச் சுரங்கம்

மேலும், பீகார் தங்க வயலில் சுமார் 222.85 மில்லியன் டன் தங்க உலோகம் இருப்பதாகவும், இது நாட்டின் மொத்த தங்கக் கையிருப்பில் இது 44 சதவிகிதம் என்றும் கூறியிருந்தார். எனவே பீகாரின் இந்த தங்க வயல் `இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம்' என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.



from Latest News

Post a Comment

0 Comments