Ticker

6/recent/ticker-posts

Ad Code

8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வெளியாகியுள்ள ‘தாகத்’ திரைப்படத்தின் 8-வது நாளில், 20 டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ. 4,420 மட்டுமே வசூலாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். குறிப்பாக கொரோனா காலக் கட்டத்தில் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்குப் பிறகு, பாலிவுட் திரைப்பட உலகில் வாரிசு ஆதிக்கம் பற்றி இவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இந்திய அளவில் வைரலானது. அதன்பிறகு, மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்தது, மொழி சர்ச்சையில் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாம் என்ற கூறியது என எண்ணற்ற சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகிறார்.

சர்ச்சைகளுக்கு இடையே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இவர் நடிப்பில், கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தாகத்’. அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தை ரஸ்னீஷ் ராசி காய் இயக்கியிருந்தார். 80 முதல் 90 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் அர்ஜூன் ராம்பல், திவ்யா தத்தா, சஸ்வதா சாட்டர்ஜி ஆகியோர் நடித்திருந்தனர்.

image

இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களை பெரிதளவில் ஈர்க்காததால், இந்தத்திரைப்படம் வெளியாகி 8 நாள்களில் 3 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை. குறிப்பாக 8-வது நாளில் இந்திய அளவில் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்று 4,420 ரூபாய் வருவாய் மட்டுமே ஈட்டியுள்ளது திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டமடைந்துள்ளநிலையில், ஓடிடி தளத்தில்கூட வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நெட்டிசன்கள், மீம் மூலம் கங்கனா ரனாவத்தை ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

image

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments