டெல்லியில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் சுட்டெரித்து வருகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். குளிர்பானங்கள், பழச்சாறு உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று வெப்பத்தின் தாக்கம் 44 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைக்காக வெளியே செல்ல நேரிட்டால், குடை வைத்துக் கொள்ளவும், தொப்பி, கருப்புக்கண்ணாடி உள்ளிட்டவற்றை அணிந்து கொள்ளவும் எனவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவோ அல்லது இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகும்போது வெப்ப அலை அறிவிக்கப்படுகிறது. மேலும், இயல்பான வெப்பநிலையில் இருந்து 6.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால் கடுமையான வெப்ப அலை என்று அறிவிக்கப்படும்.
ஏப்ரல் 21, 2017 அன்று டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலையாக 43.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. அதுபோல டெல்லியின் மிக அதிகபட்ச வெப்பநிலை என்றால் அது ஏப்ரல் 29, 1941 அன்று பதிவான 45.6 டிகிரி செல்சியஸ் ஆகும்.
இதையும் படிக்க:'44°C வெப்பநிலை' - டெல்லியில் மீண்டும் அடுத்த வாரம் வெப்ப அலை வீசும் என கணிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments