Ticker

6/recent/ticker-posts

Ad Code

பெட்ரோல் மீது அதிக வரி விதிப்பது மத்திய அரசா? மாநில அரசா? விரிவான அலசல்!

பெட்ரோலில் மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு வரி விதிக்கின்றன? யாருக்கு அதிக வருவாய் கிடைக்கிறது என்பதை இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

இந்தியாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வருவதை தொடர்ந்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்ததுபோல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசுகள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை. வாட் வரியை குறைக்காமல் மாநில அரசு மக்களை கூடுதல் சுமைக்கு ஆளாக்குகிறது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது” என்று பேசினார்.

பிரதமரின் இந்த பேச்சு நாடு முழுவதும் விவாதங்களை கிளப்பியுள்ளது. உண்மையிலேயே பெட்ரோலில் மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு வரி விதிக்கின்றன? யாருக்கு அதிக வருவாய் கிடைக்கிறது என்பதை இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

drop in prices of petrol diesel know 28th april rate in gaya muzaffarpur purnia | Petrol Diesel Price Today: पेट्रोल डीजल के दामों में आई गिरावट, जानें बिहार में क्या है लेटेस्ट

மத்திய அரசு விதிக்கும் வரி:

பெட்ரோல் மீது மத்திய அரசு கலால் வரி, செஸ் வரி, சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட பல வரிகளை விதிக்கும் நிலையில், கலால் மற்றும் செஸ் ஆகிய இரு வரிகளே அதிக அளவு விதிக்கப்படுகிறது. இதில் கலால் வரி மாநிலங்களுக்கு சதவீத அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். 2014 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற போது 9.48 சதவீதமாக இருந்த கலால் வரி, 2017 ஆம் ஆண்டு வரை மாறாமல் அப்படியே தொடர்ந்தது. அதன்பின் படிப்படியாக குறைக்கப்பட்ட இந்த வரி தற்போது 1.9% என்ற அளவில் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் செஸ் வரி முழுவதும் மத்திய அரசுக்கு செல்லக்கூடியது. இந்த வரி 2014 ஆம் ஆண்டில் 12% அளவில் விதிக்கப்பட்டு வந்தது. அதன் பின் 2017 ஆம் ஆண்டில் 17.46 % ஆக உயர்ந்த செஸ் வரி, 2020 ஆம் ஆண்டில் 22.98 % ஆக அதிகரிக்கப்பட்டது. அதே ஆண்டின் இறுதியில் செஸ் வரி 32.9% ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து படிப்படியாக செஸ் வரி குறைக்கப்பட்டு தற்போது 27.9% என்ற அளவில் உள்ளது. தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு கூடுதலாக விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி விதிக்கப்படுகிறது.

Source: Petroleum Planning and Analysis Cell, Ministry of Petroleum and Natural Gas; PRS.

மத்திய அரசுக்கான வரி வருவாய் எவ்வளவு:

செஸ் வரியை தொடர்ச்சியாக உயர்த்தியதால் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான வரியால் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ. 99,068 கோடி ஆகும். 2015-16 ஆம் ஆண்டில் ரூ. 1,78,477 கோடியாகவும் 2016-17 ஆம் ஆண்டில் ரூ. 2,42,691 ஆகவும் உயர்ந்தது. அதிகபட்சமாக 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 3,72,970 கோடியாக இருந்தது. 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 2,62,976 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஆண்டு மத்திய அரசுக்கான வருவாய் (கோடிகளில்)
2014-15 99,068
2015-16 1,78,477
2016-17 2,42,691
2017-18 2,29,716
2018-19 2,14,369
2019-20 2,23,057
2020-21 3,72,970
2021-22 2,62,976

Source: Petroleum Planning and Analysis Cell, Ministry of Petroleum and Natural Gas; PRS.

மாநில அரசு விதிக்கும் வரி:

ஒவ்வொரு மாநில அரசும் வெவ்வேறு வரி விதிப்பு முறைகளை பின்பற்றுகின்றன. தமிழகத்தில் பெட்ரோலின் அடிப்படை விலையின் மீது 13% வாட் வரியும் கூடுதலாக ரூ. 11.52 வரியும் வசூலிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் தமிழக அரசு பெட்ரோல் மீது விதித்த வரி ரூ.15.67 ஆகும். தமிழக அரசு பெட்ரோல் மீதான வரி சதவீதத்தில் எந்த மாற்றமும் செய்யாத நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும் பெட்ரோல் மீதான தமிழக அரசின் வரியை ரூ.3 குறைத்து உத்தரவிட்டார். இந்த விலைக்குறைப்பினால் தமிழக அரசுக்கான வருவாய் இழப்பு ரூ. 1,050 கோடி ஆகும். தற்போது பெட்ரோலின் தமிழக அரசு மீது விதிக்கும் வரி லிட்டருக்கு ரூ.22.54 ஆக உள்ளது.

Petrol-Diesel Price Today: यूपी से लेकर राजस्थान और मध्य प्रदेश तक किस रेट बिक रहा पेट्रोल-डीजल, यहां जानें प्रमुख शहरों का रेट - petrol diesel prices Today 27 april 2022 ...

ஒரு லிட்டரில் எவ்வளவு வரி யாருக்கு?

பெட்ரோலின் அடிப்படை விலை - ரூ. 54
மத்திய அரசின் வரி- ரூ. 28
மாநில அரசின் வரி- ரூ. 23
டீலர் கமிஷன்- ரூ. 5

மொத்தம் பெட்ரோல் 1 லிட்டர் 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

யாருக்கு வருவாய் அதிகரித்துள்ளது?

வரி விதிப்பு அடிப்படையில் பார்த்தால், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி 9% லிருந்து 1.9% ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 78% வரியைக் குறைத்துள்ளது மத்திய அரசு. ஆனால் 12% ஆக இருந்த செஸ் வரி 32.9% என்ற உச்சத்தை தொட்டு தற்போது 27.9% ஆக உள்ளது. கிட்டத்தட்ட 174 சதவீதம் உயர்வை சந்தித்த செஸ் வரி, தற்போது 132% உயர்வுடன் தொடர்கிறது. (ஒப்பீடுகள் 2014 ஆம் ஆண்டு வரி விதிப்புடன் கணக்கிடப்பட்டுள்ளது. மாநில அரசின் வரி விதிப்பை எடுத்துக்கொண்டால், அடிப்படை விலையுடன் ஒப்பிடும் பட்சத்தில் பெட்ரோல் மீதான தமிழக அரசின் வரி சதவீதம் சற்றே குறைந்துள்ளது.

வருவாய் அடிப்படையில் பார்த்தால் மத்திய அரசுக்கு 2014 ஆம் ஆண்டில் கிடைத்த வருவாயை விட கடந்த ஆண்டு 165% அதிக வருவாய் கிடைத்துள்ளது. உச்சபட்ச வருவாயாக 2020-21 ஆம் ஆண்டில் 276% அதிக வருவாய் மத்திய அரசுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுக்கு கிடைத்த அதிக வருவாய் செஸ் மூலமே கிடைத்துள்ளதால் அதை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை.

பல மாநில அரசுகள் செஸ் வரியை மட்டும் மத்திய அரசு உயர்த்தியதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது மாநிலங்களின் வாட் வரியை குறைக்காதது பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என பிரதமர் மோடி பேச , சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய துவங்கிவிட்டன. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “நாங்கள் வரி விதிப்பை குறைத்து இருக்கிறோம். ஆனால் செஸ் வரியை அதிகரித்து பன்மடங்கில் வருவாய் வசூலிப்பது மத்திய அரசுதான்” என்று குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவது எப்படி? மத்திய,மாநில அரசுகளின் வரிகள் எவ்வளவு?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments