Ticker

6/recent/ticker-posts

Ad Code

அதிகாரம் பொருந்திய செயற்குழுவை அறிவித்த சோனியா... பிரசாந்த் கிஷோர் வியூகத்தின் நிலை என்ன?!

2024 மக்களவைத் தேர்தல், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வியூகம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதில் காங்கிரஸில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியானது. இந்த அறிக்கையை, காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியால் அமைக்கப்பட்ட குழு ஒன்று ஆய்வு செய்து வருகிறது. இந்த அறிக்கை மீது, இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில், தெலங்கானாவில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், ஆளுங்கட்சியான டி.ஆர்.எஸ்-க்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் முன்னர் தலைமை வகித்த ஐ-பேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது காங்கிரஸில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், காங்கிரஸின் டெல்லி தலைமையில் இருந்து எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. ஐ-பேக் நிறுவனத்தில் பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டாலும், மறைமுகமாக பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை வழங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில், 3 நாள் ஆலோசனைக் கூட்டமாக மே 13 முதல் மே 15 வரை ராஜஸ்தானின் உதய்பூரில் `நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்' என்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருப்பதாகக் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், சுமார் 400 காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 2024 தேர்தல் தொடர்பாகக் காங்கிரஸில் அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழு ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸின் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருக்கிறார்.

மேலும், 3 நாள் `நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்' ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை உட்பட பல தீர்மானங்களை வரைவதற்கு 6 குழுக்களை காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்த 6 குழுவில், அரசியல் தொடர்பான தீர்மான வரைவு குழுவுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமை தாங்குவதாகவும், பொருளாதார நிலைமை குறித்தான தீர்மான வரைவு குழுவுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தலைமை தாங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



from Latest News

Post a Comment

0 Comments