Ticker

6/recent/ticker-posts

Ad Code

'தென்னிந்திய படங்களை நான் பார்ப்பதே இல்லை' பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக்

தென்னிந்திய திரைப்படங்களை நான் இதுவரை பார்த்ததே கிடையாது என்று பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் தெரிவித்துள்ளார்.

நவாசுதின் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோபான்ட்டி 2 படம் திரையரங்குகளில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக அவர் தனியார் செய்தி வலைதளத்திற்கு நேற்று அவர் பேட்டியளித்தார்.

image

அப்போது புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்கள் சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பொதுவாக தென்னிந்திய திரைப்படங்களை இதுவரை நான் பார்த்ததே கிடையாது. அதனால் தென்னிந்திய திரையுலகம் குறித்த கேள்விக்கு நான் பதில் கூறுவது சரியாக இருக்காது.

image

ஆனால், ஒரு விஷயத்தை என்னால் தெளிவாக கூற முடியும். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் சிறிது காலத்துக்கு மக்கள் அதுகுறித்தே பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதைகளின் தாக்கத்தில் பல படங்கள் வெளியாகும். இதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பட்ட மக்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒரு திரைப்படம் இருப்பதே உண்மையான வெற்றி என நான் நினைக்கிறேன். இவ்வாறு நவாசுதின் சித்திக் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments