பெரும்பாலான பொறியியல் படிப்பிற்கு கணிதம் கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.
2022-2023ஆம் கல்வியாண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) வெளியிட்டுள்ளது. அதில் பொறியியல் பிரிவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது. இதன்மூலம் 12ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களும் இனிவரும் காலத்தில் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
12-ஆம் வகுப்பில் கணிதம் பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு முதல் இரண்டு செமஸ்டர்களில் கணிதம், இயற்பியல் ,வேதியியல் ஆகிய பாடங்களின் அடிப்படை Bridge course முறையில் கற்பிக்கப்படும் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. கணினி பொறியியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பில் வேதியல் படுத்திருக்க வேண்டியதில்லை என்றும் தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. வேளாண்மை பொறியியல், கட்டடக்கலை உயிர் தொழில்நுட்பவியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயமில்லை
முன்னதாக கடந்த 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்ட விதிமுறைகளில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை 12ம் வகுப்பில் விருப்பப் பாடமாக மட்டும் படித்து இருந்தால் அனைத்து பொறியியல் படிப்புகளிலும் சேரலாம் என தெரிவித்திருந்தது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு குறிப்பிட்ட பொறியியில் பாடப்பிரிவுகளில் மட்டும் கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை பயிலாத அவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நாட்டில் 1,515 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments