Ticker

6/recent/ticker-posts

Ad Code

விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! - சமையல் தொழிலாளி போக்சோவில் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சமையல் கான்ட்ராக்டர் ஒருவர், சுப நிகழ்ச்சிகளுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இதற்காக சமையல் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோரை வேலைக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்திருந்த அவர் திருமண மண்டபத்திற்கு தனது மூன்று வயது குழந்தையயும் கூட்டிச்சென்றுள்ளார். அப்போது குழந்தையை மண்டபத்தில் விளையாட வைத்துவிட்டு தொழிலாளர்களுடன் சமையல் வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்.

சிறார் வதை


இந்நிலையில் அவரின் குழந்தை திடீரென காணாமல் போனதால் மண்டபம் முழுக்க தனது தொழிலாளர்களுடன் தேடியுள்ளார். அப்போது ஆண்கள் கழிவறைக்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு கழிவறையின் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது, தான் சமையல் வேலைக்கு வைத்துள்ள எமனேஸ்வரம் முதலியார் தெருவைச் சேர்ந்த ரவீந்திரன் (50) தனது குழந்தையை தூக்கிச் சென்று கழிவறைக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமையல் கான்ட்ராக்டர் கொடுத்த புகாரின் பேரில் ரவீந்திரனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



from Latest News

Post a Comment

0 Comments