Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஆஸ்கர்: சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்ற நட்சத்திரங்களின் அங்கியில் மின்னிய உக்ரைன் கொடி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2022 விருது விழா நடைபெறுகிறது. இதில் பாரம்பரியமிக்க சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்ற கலைஞர்களில் பெரும்பாலானோர் உக்ரைன் நாட்டு கொடியை தங்களது அங்கியில் இடம் பெற செய்திருந்தனர். ஒவ்வொருவரும் அவர்களுக்கு உள்ள பாணியில் உக்ரைனுக்கு ஆதரவாக இதனை செய்திருந்தனர். 

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து போரிட்டு வருகிறது. சுமார் 1 மாத காலத்திற்கு மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. பெனடிக்ட் கம்பெர்பாட்ச், ஜேஸன் மோமோவா, ஜேமி லீ கர்டிஸ், ஜோ வாக்கர், நிக்கோல் கிட்மேன், ஜெசிகா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களது அங்கியில் அந்த நாட்டின் கொடியை இடம் பெற செய்தனர். சிவப்பு கம்பளத்தை ஒரு மேடையாக பயன்படுத்தி உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் குரலை ஒலிக்க செய்துள்ளனர் அவர்கள். 

சிலர் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு ஆதரவாக நீல நிறத்திலான ரிப்பனை அணிந்து வந்திருந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments