Ticker

6/recent/ticker-posts

Ad Code

விழுப்புரம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 10-ம் வகுப்பு மாணவி? - காவல்துறை விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி, கடந்த சில தினங்களாக உடலளவிலும், மனதளவிலும் சோர்வுடன் இருந்துள்ளார். இதனை கவனித்த அப்பள்ளியில் பணியாற்றும் ஹேமலதா என்ற ஆசிரியை, மாணவியிடம் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

அப்போது, அச்சிறுமி உறவினர் சசி என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த மாணவியிடம் விசாரிக்கையில், உறவினர் சசியின் நண்பர்கள், அப்பகுதி இளைஞர்கள் சிலர் என சுமார் 10 பேர் வரை அம்மாணவியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கண்ணீருடன் கூறினாராம். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை ஹேமலதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா-வுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவல் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அந்த மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்' விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட மகளிர் காவல்துறையினர், மாணவிடம் விசாரணை மேற்கொண்டார்.

பாலியல் வன்கொடுமை

மாணவி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் முதற்கட்டமாக 3 பேரை அழைத்து விசாரித்தனர். அப்போது, மாணவியின் உறவினர் சசி என்பவர் மட்டும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கும் மகளிர் காவல்துறையினர், இன்றைய தினம் சசியை சிறையில் அடைக்க உள்ளனர். மேலும், மாணவியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா? என்ற சந்தேக கோணத்தில், இவ்வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் மகளிர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Latest News

Post a Comment

0 Comments