ரஷ்ய வீரர்களின் முன்னெடுப்பை தடுக்க, உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் போர்க்களத்தில் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்தார். தெற்கு மாகாணமான கெர்சானில் ரஷ்ய ராணுவ வாகனங்கள் படையெடுத்து சென்றனர். அவர்களை தடுக்க எண்ணிய உக்ரைன் ராணுவ வீரர் வோலா டைமிரோவிச் (Vitaly Skakun Volodymyrovych), தன்னிடம் இருந்த குண்டுகளை வெடிக்க செய்து உயிர் நீத்தார்.
இதனால் ரஷ்ய வீரர்கள் முன்னோக்கி செல்ல திட்டமிட்டு இருந்த பாலம் முற்றிலும் சேதம் அடைந்தது. உக்ரைன் ராணுவ வீரரின் இந்த உயிர் தியாகம், என்றும் நினைவில் நிற்கும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments