ரஷ்யாவின் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் தங்கள் நாட்டை காப்பாற்றக் கடுமையாகப் போராடி வருகிறது. 'ஐந்தாவது நாளாகத் தொடரும் இந்த போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தைக்கு, பெலாரஸில் தயாராக இருக்கிறோம்' என ரஷ்யா தெரிவித்தது.
ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி "பெலாரஸ் பகுதி வேண்டாம், வார்சா, பிராட்டிஸ்லாவா, புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகு இதில் ஏதேனும் ஒரு பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரஷ்யா தென்கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மேலும் இரண்டு நகரங்களை கைப்பற்றியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இதனிடையே தான் பெலாரஸில் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்பு கொண்டதாகவும் இன்று பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் தெரிகிறது.
இதுவரை 200 -க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், 1,50,000 மக்கள் அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இந்த போருக்கு எதிராக உலக நாடுகள் பல உக்ரைனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றன. மேலும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரிட்டன் பிரதமர் பேசியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஆக்கிரமிப்பாளர்களை எதிர்கொள்ள மேலும் கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. போர் - எதிர்ப்பு கூட்டணி செயலில் உள்ளது" என பிரிட்டன் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு நேரடியாகப் போர் ஆயுதங்களை அனுப்பி உதவமுடியாததால் சுமார் 600 மில்லியன் டாலர்களை அமெரிக்க தருவதாகத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மேலும் 54 மில்லியன் டாலர்கள் தந்து உதவுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், போர் விமானங்களை வீழ்த்தும் ஏவுகணைகளையும் வழங்க இருக்கிறது அமெரிக்கா.
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் இந்த ஆதரவால் நம்பிக்கை பெற்றுள்ளது உக்ரைன்.
from Latest News
0 Comments