உக்ரைனில் சிக்கியுள்ள தங்கள் உறவினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறி, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தை ஏராளமானோர் முற்றுகையிட முயன்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு குறித்து தெளிவின்மை நிலவுகிறது. அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வருமாறு உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் இருப்போரின் உறவினர்கள் டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு துணை ராணுவத்தினரும் டெல்லி காவல் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments