கோவை அ.தி.மு.க நிர்வாககிள் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து, 28-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ``அ.தி.மு-கவை யாராலும் அழிக்க முடியாது.
சிலர் தி.மு.க-வுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு மதிப்பில்லாததால், சென்ற வேகத்தில் திருப்பி வருகின்றனர். காவல்துறையை வைத்து பொய்வழக்கு போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
தி.மு.க எதிர்ப்புநிலையில் ஆணித்தரமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள ரௌடிதான் ஜெயக்குமாரை பிடித்துக் கொடுத்துள்ளார். இந்தத் தேர்தலை பொறுத்தவரை எல்லாரும் சிறப்பாக பணியாற்றினார்கள். நாங்கள் தினமும் 2-3 மணிநேரம் தான் தூங்கினோம். கடந்த சட்டசபைத் தேர்தலில் இங்கு வெற்றி பெறாததால், தி.மு.க கோவைக்கு சிறப்பு கவனம் செலுத்தியது.
தேர்தலில் மக்களுக்கு தி.மு.க-வுக்கு ஓட்டு போடும் எண்ணமே இல்லை. மக்கள் எல்லோரும் நாங்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போட்டோம். எப்படி இப்படி ஆனது என்றே தெரியவில்லை என்று பரவலாக பேசுகிறார்கள்.
தேர்தலைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். கோவை, திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்கும் சூழல் 100 சதவிகிதம் இருந்தது. முதுகில் குத்திதான் அந்த வெற்றியை தட்டிப் பறித்துள்ளனர். தேர்தலில் வி.வி.பேட் ( யாருக்கு வாக்களித்தோம் என ஒப்புதல் சீட்டு காட்டும்) இயந்திரத்தை வைக்காதபோதே,
தேர்தலை எப்படி நடத்தவார்கள் என்று தெரிந்துவிட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குக் கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. ஸ்டாலின் மிகவும் மோசமாக உள்ளார்” என்றார்.
from Latest News
0 Comments